இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து

Bookmark and Share

இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து

பிரபல தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் சிறந்த நடிகராக `விக்ரம் வேதா' படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய `அறம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றார்.

மேலும் மக்களின் மனம் கவர்ந்த நாயகிக்கான விருதையும் நயன்தாரா தட்டிச் சென்றார். 

இவ்வாறாக இரண்டு விருதுகளை வென்றிருக்கும் நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது, 

`உன்னை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது நயன்தாரா ! மேலும் சிறக்க ! இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா, மேலும் பல இதயங்களை கொள்ளையடிக்க வாழ்த்துக்கள் ! அறம் படத்தின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்றும், மற்றொரு டுவீட்டில், என் விருதுடன், அவளது விருதுகள் என்று தலைப்பிட்டு, மனதிற்குள், நம்ம எப்போ இப்படி விருதா வாங்கி, இந்த புள்ள கிட்ட கொடுக்கப் போரோமோ என்று குறிப்பிட்டுள்ளார். 

சிறந்த நடிகருக்கான விருதை வென்ற விஜய் சேதுபதிக்கும், விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!
100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions