“நயன்தாராவை பார்த்து புதுமுகங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” - இயக்குனர் சித்திக் புகழாரம்..!

Bookmark and Share

“நயன்தாராவை பார்த்து புதுமுகங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” - இயக்குனர் சித்திக் புகழாரம்..!

நயன்தாரா மலையாளத்தில் தற்போது நடித்துவரும் படம் தான் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. சித்திக் இயக்கிவரும் இந்தப்படத்தில் மெகாஸ்டார் மம்முட்டி தான் ஹீரோ.. ஏற்கனவே சித்திக் இயக்கிய 'பாடிகார்டு' படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டுக்களை அள்ளி குவித்ததால், சித்திக் படம் என்றதுமே எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே சமத்தித்துவிட்டார் நயன்தாரா.

ஐந்து வருடம் கழித்து, மீண்டும் தனது தாய்மொழியில் நடிக்கப்போகிறோம் என்கிற  சந்தோஷம் இன்னொரு காரணம்.  தாய்மொழியாக இருந்தாலும் சம்பளம் குறைவு என்பதால் கால்ஷீட்டை காரணம் காட்டியே மலையாளப் படங்களில் நடிப்பதை தவிர்த்து விடும் இந்த காலத்தில் நயன்தாரா ரொம்பவே வித்தியாசமானவர்.

அதுதான் இயக்குனர் சித்திக்கையும் ரொம்பவே கவர்ந்திருக்கிறது.. தற்போது கிட்டத்தட்ட 66 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டார் சித்திக். இன்னும் பத்து நாள் படப்பிடிப்பு தான் பாக்கி உள்ளதாம்.

“பொதுவாக இன்றைய அறிமுக நடிகைகளே பாதி படம் நடித்தவுடன் பந்தா காட்ட தொடங்கிவிடும் நிகழ்வுகள் தான் அதிகம். ஆனால் நயன்தாரா படப்பிடிப்பு தளத்திற்கு சொன்ன நேரத்திற்கு முன்கூட்டியே வந்து தயாராக நிற்பதும், எந்த ஒரு ஷாட்டுக்கும் அழைத்ததும் தாமதிக்காமல் வருவதும் என அதே பழைய நயன்தாராவாகவே இருக்கிறார். இன்று வரும் புதுமுகங்கள் அவரை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்” என நயன்தாராவின் தொழில் பக்தியை பாராட்டியுள்ளார் இயக்குனர் சித்திக்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions