நயன்தாராவின் நட்சத்திர ரசிகை!

Bookmark and Share

நயன்தாராவின் நட்சத்திர ரசிகை!

ஒரு நடிகர் இன்னொரு நடிகருக்கு ரசிகராக இருக்க மாட்டார். விதிவிலக்காக, ரஜினி, அஜித் ஆகியோருக்கு சக நடிகர்கள் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். நடிகைகளில் நயன்தாராவுக்குத்தான் சக நடிகர்கள், சக நடிகைகள் பலர் ரசிகையாகவும் ரசிகராகவும் இருக்கிறார்கள்.

நடிகை நயன்தாராவுக்கு தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவிலும் கூட பல நட்சத்திர ரசிகர்களும், ரசிகைகளும் இருக்கிறார்கள்! நயன்தாராவை விரும்பும் நடிகைகளில் பட்டியலில் நடிகை இஷா தல்வரும் ஒருவர்! எந்தளவுக்கு ரசிகை தெரியுமா? தீவிர ரசிகையாம். நயன்தாரா தற்போது நடித்து வரும் மலையாள படம் - பாஸ்கர் தி ராஸ்கல்.

சமீபத்தில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தைக் கேள்விப்பட்ட நடிகை இஷா தல்வர், நேராக படப்பிடிப்புதளத்திற்கு சென்று நயன்தாராவை சந்தித்துள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் நயனுடன், உரையாடி அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்! இந்த சம்பவத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இஷா தல்வார்!


Post your comment





Related News
சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா!
“நயன்தாராவை பார்த்து புதுமுகங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” - இயக்குனர் சித்திக் புகழாரம்..!
நயன்தாராவின் \'நைட் ஷோ\' படத்தின் தலைப்பு ’மாயா’வாக மாற்றம்
நடிகைகளை புலம்பவிட்ட நயன்தாரா!
பட வாய்ப்பை தட்டிப்பறிக்கும் நஸ்ரியா - உச்ச கட்ட‌ கோபத்தில் நயன்தாரா.
விமான நிலையத்தில் நயன்தாராவை தினறடித்த அதிகாரிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions