நயன்தாரா படங்களின் ரிலீஸ் விவரம்...

Bookmark and Share

நயன்தாரா படங்களின் ரிலீஸ் விவரம்...

2015ம் ஆண்டில் நயன்தாராதான் முன்னணி ஹீரோயினாக இருக்கப் போகிறார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். அடுத்தடுத்து தொடர்ச்சியாக அவருடைய பல படங்கள் வெளியாக உள்ளன.

தமிழில் தற்போது முன்னணியில் இருக்கும் பல முக்கிய நட்சத்திரங்களின் படங்களிலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். நாளை ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் 'நண்பேன்டா' படத்திலிருந்து அவருடைய இந்த ஆண்டு படங்களின் வெளியீடு ஆரம்பமாக உள்ளது.

அடுத்து, மே 1ம் தேதி 'மாஸ்' படமும், மே 15ம் தேதி 'மாயா' திரைப்படமும், ஜுன் 1ல் 'இது நம்ம ஆளு', ஜுன் 15 'தனியொருவன்', ஜுலை 15 'நானும் ரௌடிதான்' ஆகிய படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு ஏப்ரல் 14ம் தேதி சிறிய இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்துள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்' படமும் வெளியாக உள்ளது. மேலே சொன்ன ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்த படங்களாக அமைந்துள்ளன.

இந்தப் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறும் பட்சத்தில் இந்த ஆண்டில் அசைக்க முடியாத நாயகியாக நயன்தாரா இருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களை உற்சாகப்படுத்திய நயன்தாரா
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா! என்ன சொல்றீங்க
இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions