இமைக்கா நொடிகள் அப்டேட்: மேக்கப் இல்லாமல் நடிக்கும் நயன்தாரா

Bookmark and Share

இமைக்கா நொடிகள் அப்டேட்: மேக்கப் இல்லாமல் நடிக்கும் நயன்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தற்போது ‘டோரா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘கொலையுதிர்காலம்’ உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘அறம்’ படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மிக இயல்பாக தெரிய வேண்டும் என்பதற்காக மேக்கப் இல்லாமல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இதில் தனது வேடம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நயன்தாரா மேக்கப் போடாமல் இயல்பாக நடித்து வருகிறாராம்.

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற 'மாயா' படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தார். 'மாயா' வெற்றிக்குப்பின்னர் தான் கதாநாயகியை மையமாகக்கொண்ட படங்களில் நயன்தாரா அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
நயன்தாரா புதிய சாதனை: இந்த சாதனையை முறியடிப்பாரா?
2016ம் ஆண்டுக்கான ரசிகர்களால் விரும்பத்தக்க நாயகிகளில் முதலிடத்தில் யார்- இதோ முழு விவரம்
நயன்தாராவின் அடுத்த படம் ஜனவரியில்! நியூ அப்டேட்
மற்றொரு ஹீரோயின் நடித்த படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் தருவாரா?
நானும்ரவுடிதான் படத்தை ரீமேக் செய்ய கடும்போட்டி!
விடிய விடிய விக்னேஷ் சிவனுக்கு பார்ட்டி கொடுத்த நயன்தாரா
நயன்தாராவை வேண்டாம் என்று விஜய் கூறியது ஏன்?
போலீஸ் அதிகாரியாகும் நயன்தாரா..!
நயன்தாரா தோல்வி ராசியிலிருந்து தப்பித்துள்ளார்
பேய் சீசன் ஆரம்பம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions