மீடியாவா வேண்டாம்...! அலறும் நயன்தாரா!

Bookmark and Share

மீடியாவா வேண்டாம்...! அலறும் நயன்தாரா!

சில தினங்களுக்கு முன் ரோமியோ ஜூலியட் படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள அப்படத்தின் நாயகி ஹன்சிகாவை தயாரிப்பாளர் நந்தகோபால் அழைத்தபோது, நான் பிரஸ்மீட்டுக்கு வந்தால் சிம்பு உடனான லவ் பிரேக்கப், நிர்வாண வீடியோ பற்றி எல்லாம் மீடியா ஆட்கள் கேள்வி கேட்பார்கள். அதனால் நான் வர மாட்டேன் என்று மறுத்திருக்கிறார்.

இந்தக் கேள்விகளை கேட்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தயாரிப்பாளர் உறுதிமொழி கொடுத்த பிறகே ரோமியோ ஜூலியம் பிரஸ்மீட்டுக்கு வந்தார் ஹன்சிகா. அவர் வந்த உடன், ரோமியோ ஜூலியட் படத்தைப் பற்றி கேள்வி கேளுங்கள் என்று முன் அறிவிப்பு செய்தனர்.

ஹன்சிகா போலவே தற்போது மீடியாவை தவிர்க்கிறாராம் நயன்தாரா. தன் மானேஜர் பெயரில் திருநாள் என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார் ஜீவா.
இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வருகிறது. திருநாள் படப்பிடிப்பில் நயன்தாரா இருக்கும்போது சென்னையிலிருந்து செய்தியாளர்களை அழைத்துச் செல்ல தீர்மானித்திருந்தார் படத்தின் நாயகனான ஜீவா. இந்த ஏற்பாட்டுக்கு முதலில் நயன்தாராவும் ஓகே சொல்லி இருந்தார். கடந்த சில நாட்களாக அவரது புதிய காதல் பற்றி மீடியாக்களில் செய்தி வர ஆரம்பித்ததும் உஷாராகிவிட்டாராம் நயன்தாரா. 

மீடியாவை இங்கு அழைத்து வந்தால் படத்தைப்பற்றி கேட்காமல் என்னுடைய பர்சனல் மேட்டர் பற்றி கேட்பார்கள். அதனால் நான் இருக்கும்போது மீடியாவை கூப்பிட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். 


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களை உற்சாகப்படுத்திய நயன்தாரா
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா! என்ன சொல்றீங்க
இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions