ஆச்சி ஆக ஆசைப்படும் நயன்தாரா

Bookmark and Share

ஆச்சி ஆக ஆசைப்படும் நயன்தாரா

தலைப்பை பார்த்தவுடன், நயன்தாரா ஏதோ காரைக்குடி பகுதிவாழ் ஒருவரின் மருமகளாக ஆகப்போகிறார் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்த்திரையுலகில், "ஆச்சி" என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை மனோரமா. குணச்சித்திர வேடங்கள் என பல்வேறு கேரக்டர்களில் மனோரமா நடித்திருக்கும்போதிலும், அவரின் நகைச்சுவை நடிப்பே, மக்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

அதேபோல, தானும் மனோரமா மற்றும் கோவை சரளா போன்று காமெடி கேரக்டர்களில் கலக்க வேண்டும் என்பதே, நயன்தாராவின் கனவாக உள்ளது. ஹரியின் இயக்கத்திலான ஐயா படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. தன் அறிமுக நடிப்பிலேயே, அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். குறுகிய காலத்திலேயே, ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி படத்தில் நடித்தார். இதன்மூலம், கோலிவுட்டில் முன்னணி நடிகையானார். 

பின் நயன்தாரா, படங்களில் நடித்த செய்தியை விட, அவரது அந்தரங்க வாழ்க்கை பற்றிய செய்திகளே, ஊடகங்களில் அதிகம் வெளிவந்தன. இருந்தபோதிலும், நயன்தாரா, திரையுலகில் முன்னணி நடிகையாகவே திகழ்ந்துவந்தார்.

படங்களில் ஹீரோயின்கள், ரொமான்ஸ் காட்சிகளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், நயன்தாரா அந்த வழக்கத்தை உடைத்து குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து வந்தார். இதனிடையே, மனோரமா, கோவை சரளா போன்று காமெடி கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று நயன்தாரா கூறியுள்ளார்.

காமெடி பட டைரக்டர்களே....நோட் பண்ணுங்கப்பா!!!!


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களை உற்சாகப்படுத்திய நயன்தாரா
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா! என்ன சொல்றீங்க
இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions