நயன்தாரா தோல்வி ராசியிலிருந்து தப்பித்துள்ளார்

Bookmark and Share

நயன்தாரா தோல்வி ராசியிலிருந்து தப்பித்துள்ளார்

நயன்தாரா தமிழ்த் திரையுலகத்தில் நடிக்க வந்து பத்து வருடங்களாகியும் இன்னமும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர். எத்தனையோ கிசுகிசுக்கள், காதல் பஞ்சாயத்துகள் என பல விஷயங்களுக்கு மத்தியிலும் நயன்தாராவின் மவுசு மட்டும் குறையாமலே உள்ளது.

அவருடன் ஜோடியாக நடிக்க பல இளம் நடிகர்கள் கூட ஆசைப்படுகிறார்கள். தற்போது கூட கைவசம் நான்கைந்து படங்களை வைத்துக் கொண்டு பிஸியாகவே இருக்கிறார் நயன்தாரா. எனினும், அவருடைய சில படங்கள் தோல்விப் படங்களாக அமைந்து அவருடைய வெற்றிப் பாதைக்கு கொஞ்சத் தடைக்கல்லாகவே இருந்தது.  

நயன்தாரா நடித்து கடைசியாக வெற்றி பெற்ற படம் ராஜா ராணி.  அதற்கடுத்து வெளிவந்த ஆரம்பம், இது கதிர்வேலன் காதல், நீ எங்கே என் அன்பே, நண்பேன்டா, மாஸ் ஆகிய ஐந்து படங்களும் தோல்விப் படங்களின் வரிசையில்தான் சேர்ந்தது.

தொடர் தோல்விகளால் நயன்தராவின் ராசியைப் பற்றியும் சிலர் பேச ஆரம்பித்தார்கள். நல்ல வேளையாக, கடந்த வாரம் வெளிவந்த தனி ஒருவன் படம் நயன்தாராவுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மீண்டும் வெற்றிப் பாதைக்கு அவர் திரும்பியிருக்கிறார்.

அடுத்து மாயா, நானும் ரெளடிதான், இது நம்ம ஆளு, திருநாள் என வரிசையாக நயன்தாரா படங்கள் வெளிவர உள்ளன.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions