தயாரிப்பாளருடன் மோதலில் நயன்தாரா!

Bookmark and Share

தயாரிப்பாளருடன் மோதலில் நயன்தாரா!

அஜீத்தை போல தான் நடிக்கும் படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்கிற கொள்கையை கடைபிடித்து வருகிறார் நயன்தாரா.

இதன் காரணமாகத்தான் அனாமிகா படத்தில் நடித்து வந்தபோது அந்த படத்தின் இயக்குனருடன் மோதினார் அவர். அதனால் அவர் தெலுங்கு தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் செய்து ஓராண்டு நயன்தாரா தெலுங்கு படங்களில் நடிக்க ரெட் கார்டு போட வைத்தார். இப்படி நடந்தும் நயன்தாரா நிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 

இப்போதுவரை தான் நடிக்கும் படங்களின் எந்தவித ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பதில்லை. குறிப்பாக அனாமிகாவைப் போலவே தற்போது அவரை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ள மாயா படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட நயன்தாரா ஆர்வம் காட்டவில்லை.

மேலும், மாயா படம் தெலுங்கில் மயூரி என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்திற்கு பரபரப்பு கூட்ட வேண்டும் என்று நினைத்து அப்படத்தை ஆந்திராவில் வெளியிடும் கல்யாண் என்பவர், மயூரி படத்தை ஒரே ஒரு நபர் மட்டும் தனியாக தியேட்டரில் அமர்ந்து பார்த்து விட்டால், அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று அறிவித்துள்ளார். 

அதோடு, அந்த பரிசை நயன்தாரா கையினால் தருவேன் என்றும் கூறியிருக்கிறாராம். பின் இந்த அறிவிப்பு நயன்தாராவின் காதுகளை எட்டியபோது, யாரைக்கேட்டு இப்படியொரு வாக்குறுதியை வழங்கினீர்கள் என்று அவரிடம் கோபித்துக்கொண்டவர், 5 லட்சம் பரிசு வழங்க தன்னால் வரவே முடியாது என்பதை இப்போதே உறுதிபடுத்தி விட்டாராம். 

தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நயன்தாராவின் இந்த பேச்சு சம்பந்தப்பட்டவர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுக்காக கேரளாவில் சிகிச்சை எடுத்துகொண்ட நயன்தாரா?
பெரிய கதாநாயகர்களுடன் ஜோடிசேர நயன்தாரா மறுப்பு
நயன்தாரா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முருகதாஸ்!
விரைவில் தொடங்கும் நயன்தாராவின் மற்றொரு பேய் படம்!
'ஹிட்'டிற்காக நயன்தாரா இப்படியா செய்வார்...?
நயன்தாரா, சமந்தா வீடுகளில் சோதனை!
சேலம் கல்யாண் சில்க் திறப்பு விழாவில் நயன்தாரா
காதல் உறுதியானது!
தனி ஒருவனை புகழ்ந்த இந்திய கிரிகெட் வீரர்
நயன்தாரா மீது எந்த புகாரும் அளிக்கவில்லை- சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions