'ஹிட்'டிற்காக நயன்தாரா இப்படியா செய்வார்...?

Bookmark and Share

'ஹிட்'டிற்காக நயன்தாரா இப்படியா செய்வார்...?

தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என தொடர் வெற்றிகளை கொடுத்து நம்பர் 1 இடத்திற்கு வந்து விட்டார் நயன்தாரா. 

இந்நிலையில் நயன்தாராவையும், பீர் பாட்டுலும் என்று ஒரு படமே எடுத்து விடலாம் போல.

யாரடி நீ மோகினி படத்தில் இவர் மது அருந்துவது போல் ஒரு காட்சி வரும், அந்த படம் தாறுமாறு ஹிட், அதை தொடர்ந்து ராஜா ராணி படத்தில் கையில் பீருடன் வருவார். நானும் ரவுடி தான் படத்தில் பீர் வாங்க கடைக்குச் செல்வார், தற்போது திருநாள் படத்தில் பீர் பாட்டிலுடன் ஹீரோவிடம் பேசுவது போல் ஒரு காட்சி.

முந்தைய படங்களின் ஹிட் செண்டிமெண்ட் தான் இவரை இப்படி செய்ய வைக்கின்றது என பலரும் கூறி வருகின்றனர், இருப்பினும் இது தேவை தானா? என சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல் ஒரு சில சமூக ஆர்வாலர்கள் கருத்து போரை தொடங்கிவிட்டனர்.

பற்றாக்குறைக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து எடுத்தப்படியான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருகிறது.

 

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுக்காக கேரளாவில் சிகிச்சை எடுத்துகொண்ட நயன்தாரா?
பெரிய கதாநாயகர்களுடன் ஜோடிசேர நயன்தாரா மறுப்பு
நயன்தாரா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முருகதாஸ்!
விரைவில் தொடங்கும் நயன்தாராவின் மற்றொரு பேய் படம்!
நயன்தாரா, சமந்தா வீடுகளில் சோதனை!
சேலம் கல்யாண் சில்க் திறப்பு விழாவில் நயன்தாரா
காதல் உறுதியானது!
தயாரிப்பாளருடன் மோதலில் நயன்தாரா!
தனி ஒருவனை புகழ்ந்த இந்திய கிரிகெட் வீரர்
நயன்தாரா மீது எந்த புகாரும் அளிக்கவில்லை- சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions