பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா, அஞ்சலி!

Bookmark and Share

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா, அஞ்சலி!

தற்போது தான் வெளியாகி வெற்றி பெற்ற லயனின் கர்ஜனை ஓய்வதற்குள் நந்தமூரி பாலகிருஷ்ணா தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாகி விட்டார். அவர் அடுத்து நடிக்க இருக்கும் படம் டிக்டேட்டர் ஆகும்.

இந்த புதிய படத்தின் தொடக்க விழா இந்த மாதம் 29ம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் இந்த படத்தில் பாலைய்யாவுக்கு இரண்டு கதாநாயகிகளாம். பிரபல நடிகைகளான நயன்தாரா மற்றும் அஞ்சலி பாலைய்யாவுடன் ஜோடி சேருகின்றார்களாம்.

ஏற்கனவே நடிகை நயன்தாராவும், பாலகிருஷ்ணாவும் இணைந்து சிம்ஹா படத்தில் நடித்தது நினைவிருக்கலாம். 

அந்த படம் மெகா ஹிட்டாகி வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் இந்த வெற்றி கூட்டணி அந்த மாஜிக்கை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தை லக்ஷ்யம் பட புகழ் ஸ்ரீவாஸ் இயக்குகிறார்.

பிரபல கதாசிரியர்களான கொன வெங்கட் மற்றும் கோபி மோகன் ஆகியோர் இந்த படத்திற்கு கதை எழுதுகின்றனர். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions