கோலிவுட்டுக்கு வந்த அடுத்த நயன்தாரா!

Bookmark and Share

கோலிவுட்டுக்கு வந்த அடுத்த நயன்தாரா!

நயன்தாரா சாயலில் சினிமாவில் என்ட்ரி ஆனவர் மேக்னாராஜ். வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த பிரமிளாவின் மகள் இவர். கன்னடத்தில் சில படங்களில் நடித்து விட்டு காதல் சொல்ல வந்தேன் என்ற படம் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார்.

அப்போது இவரை ஜூனியர் நயன்தாரா என்றெல்லாம் பெரிய பில்டப் கொடுத்தார்கள். அதனால் நயன்தாராவுக்குகூட இந்த புது வரவு நடிகை தனது மார்க்கெட்டை கவிழ்த்து விடுவாரோ என்கிற அச்சம் ஏற்பட்டது. ஆனால், மேக்னாராஜ் நடித்த எந்தபடமும் ஓடவில்லை.

அதனால் நயன்தாராவுக்கு அவரால் துளியும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில், தற்போது ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள ரொம்ப நல்லவன்டா நீ என்ற படத்தில் அறிமுகமாகியுள்ள மலையாள நடிகை ஸ்ருதிபாலாவையும் அடுத்த நயன்தாரா என்று அந்த படக்குழுவினர் பில்டப் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மேக்னாராஜ் ஓரளவு நயன்தாரா சாயலில் இருந்தார். இந்த ஸ்ருதிபாலா கொஞ்சம்கூட நயன்தாரா போன்று இல்லை. பிறகு எதற்காக நயன்தாராவுடன் இவரை ஒப்பிட்டு பேசுகிறார்கள் என்று கேட்டால், இவர் நயன்தாரா பிறந்த ஊரைச்சேர்ந்த நடிகை என்கிறார்கள்.

அதாவது, கேரளாவில் நயன்தாரா பிறந்த திருவல்லா என்ற ஊரில்தான் இந்த ஸ்ருதிபாலாவும் பிறந்தவராம். அதனால் அவருக்கு ஐயா படத்தில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது போன்று இவருக்கும் இந்த படத்தில் கிடைத்து தமிழ் சினிமாவில் அடுத்த நயன்தாரா ஆகி விடுவார் என்கிறார்கள்.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions