நயன்தாராவின் ரசிகர் கூட்டத்தை பார்த்து அதிர்ந்த அரசியல் கட்சியினர்

Bookmark and Share

நயன்தாராவின் ரசிகர் கூட்டத்தை பார்த்து அதிர்ந்த அரசியல் கட்சியினர்

10 வருடங்கள் கடந்தும் இன்னும் தமிழ் நாட்டில் நம்பர் 1 நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா. இவரின் அடுத்தடுத்த வெற்றிப்படங்களால் ரசிகர்களிடம் இவர் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் சேலத்தில் நடந்த ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு இவர் சென்றிருந்தார். அங்கு அவரை சந்திக்க எதிர்பாராதவிதமாக சுமார் 5000 பேர் திரண்டதால், போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீஸார், லேசான தடியடி நடத்தியதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நயன்தாராவுக்கு இப்படி தன்னிச்சையாக திரண்ட கூட்டத்தை கண்ட அரசியல் கட்சியினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நயன்தாராவை தங்கள் கட்சியில் இணைத்து, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தலாமா என்ற ஆலோசனையில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

தி.மு.க. மற்றும் பா.ஜ.க, வட்டாரங்களில் தான், இந்த ஆலோசனை தீவிரமாக நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தி.மு.க. வட்டாரங்களில் இது பற்றி கூறப்படுவதாவது:

தமிழகத்தில், முதல்வர் ஜெயலலிதா அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். அவரை எதிர்கொள்ள வேண்டும் என்றால் பிரபலமான நடிகை ஒருவர் தேவை.

அப்படியொரு எண்ணத்துடன் தான் சில ஆண்டுகளுக்கு முன், நடிகை குஷ்புவை கட்சியில் இணைத்தனர். அவரும் கட்சிக்காக நிறைய பணியாற்றினார். ஆனால், அவரது வெளிப்படையான பேச்சு, கட்சியில் இருக்கும் சில தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதனால் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து, அவர் கட்சியில் வெகுகாலம் நீடிக்க முடியவில்லை. ஆனால், கட்சிக்காக அவர் ஆற்றிய பணி சிறப்பானது. அவர் இடத்தை நிரப்ப, ஒரு நடிகை அவசியம் தேவை.

சமீபத்தில், சேலம் சென்றிருந்த நயன்தாராவுக்கு கூடிய கூட்டத்தை பார்க்கும்போது, அவரை கட்சிக்கு அழைத்து வந்தால் கட்சிக்கு பலம் சேர்க்கும். அதற்கான முயற்சியை சிலர் எடுத்துவருகின்றனர் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன.

இது பற்றி நயன்தாராவின் நெருக்கமான வட்டாரங்களில் கூறியதாவது:

சேலத்தில் இப்படியொரு கூட்டம் கூடும் என நயன்தாராவே எதிர்பார்க்கவில்லை. சினிமாவில் இன்னும் பல ஆண்டுகள் நடிக்க விருப்பம் கொண்டிருப்பதால், அரசியலுக்குள் இப்போது நுழைய விருப்பமில்லை. கூட்டத்தை பார்த்தால், அரசியல் கட்சியினர் ஆசைப்படத் தானே செய்வர் என்று கூறியுள்ளனர்.


Post your comment





Related News
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions