நயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராகவுள்ள தயாரிப்பாளர்கள்

Bookmark and Share

நயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராகவுள்ள தயாரிப்பாளர்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 பட உலகில் முன்னணி கதாநாயகியாகன நயன்தாரா சமீபத்தில் நடித்து வெளியான ‘தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான்’ படங்களின் தொடர்வெற்றியால் மார்க்கெட் மேலும் உயர்ந்துள்ளது. 

அவருடன் ஜோடியாக நடிக்க கதாநாயகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தயாரிப்பாளர்களும் சம்பளத்தை உயர்த்தி கொடுக்க தயாராக உள்ளனர். தற்போது நயன்தாரா ரூ. 3 கோடி சம்பளம் வாங்குகிறார் எனவும் தென்னிந்திய பட உலகில் வேறு எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இல்லை எனவும் தகவல்கள் பரவி வருகின்றனர். 

இதுகுறித்து பிரபல மலையாள டைரக்டர் ஏ.கே.சாஜன் அளித்த பேட்டியில், ‘‘ஒரு நடிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ‘ரோல் மாடல்’ நயன்தாரா. 

நான் இயக்கும் ‘புதிய நியமம்’ என்ற மலையாள படத்தில் மம்முட்டி ஜோடியாக அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். படப்பிடிப்பு காலை 9 மணிக்கு தொடங்குவதாக இருந்தால், 30 நிமிடம் முன்னதாகவே வந்து விடுவார். படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் சென்று முடங்குவது இல்லை. 

படப்பிடிப்பு தளத்திலேயே உட்கார்ந்து படக்குழுவினருடன் பேசிக்கொண்டு இருப்பார். தலைக்கனம் அவருக்கு கிடையாது. எளிமையாக பழகுகிறார். தென்னிந்திய பட உலகில் நயன்தாரா ‘நம்பர் 1’ இடத்தில் இருப்பது மலையாள மக்களுக்கு பெருமை அளிப்பதாக உள்ளது. நயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

குறைந்த சம்பளம் கொடுக்கும் மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவருக்கு கதையும் கதாபாத்திரமும்தான் முக்கியம். பணத்தை பெரிதாக நினைப்பது இல்லை.

கதாபாத்திரம் பிடித்து இருந்தால் உடனே நடிக்க சம்மதித்து விடுவார். அப்படித்தான் எனது கதையும் அவருக்குப் பிடித்து போய் மலையாள படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்” என்று டைரக்டர் சாஜன் கூறினார்.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions