விமான நிலையத்தில் நயன்தாராவிடம் போலீஸ் விசராணை

Bookmark and Share

விமான நிலையத்தில் நயன்தாராவிடம் போலீஸ் விசராணை

நயன்தாரா ‘இருமுகன்’ என்ற படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை மலேசியாவில் நடத்துகின்றனர். இதற்காக நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா புறப்பட்டு சென்றனர்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் நயன்தாரா இறங்கியபோது அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

அப்போது நயன்தாராவின் டிக்கெட்டில் இருந்த பெயரும் பாஸ்போர்ட்டில் இருந்த பெயரும் வெவ்வேறாக இருந்ததாகவும் எனவே வெளியே செல்ல அனுமதிக்காமல் விமான நிலையத்திலேயே சிறிது நேரம் தடுத்து நிறுத்தியதாகவும் இணையதளங்களில் தகவல்கள் பரவின.

நயன்தாராவை சுற்றிலும் மலேசிய போலீசார் நின்று அவரிடம் விசாரணை நடத்துவது போன்று படங்களும் அவரது பாஸ்போர்ட்டும் இணையதளங்களில் வந்தன. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. 

நடிகர்-நடிகைகள் இந்த செய்தி உண்மையா? என்று சக நடிகர்களிடம் போனில் விசாரிக்க தொடங்கினர். ரசிகர்கள் இந்த தகவலையும், படத்தையும் நண்பர்களுக்கு ‘வாட்ஸ் அப்’களில் அவசரமாக அனுப்பிய வண்ணம் இருந்தார்கள்.

நயன்தாரா தனது பாஸ்போர்ட்டில் ஆரம்பத்தில் டயானா மரியம் குரியன் என்று தனது உண்மையான பெயரை குறிப்பிட்டு இருந்தார். தற்போது அந்த பெயரை நயன்தாரா என்று மாற்றி இருக்கிறார். இதுகுறித்துதான் போலீசார் விசாரிக்கிறார்கள் என்று கூறப்பட்டது. 

அத்துடன் பாஸ்போர்ட்டில் நயன்தாரா பிறந்த ஊர் கர்நாடகா என்று இருக்கிறது. ஆனால் அவரது சொந்த ஊர் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றியும் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘இருமுகன்’ படக்குழுவினர் இந்த தகவலில் உண்மையில்லை என்று மறுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ’நயன்தாரா மலேசியா வந்து படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த படத்தில் அவர் ரகசிய போலீசாக நடிக்கிறார். இதற்காக மலேசிய போலீசாருடன் அவர் நிற்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டன. 

அந்த படத்தை யாரோ வெளியிட்டு வதந்தி பரப்பி உள்ளனர்’’ என்றனர். ஆனால் இன்னும் சிலர் அது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம் அல்ல என்றும் மலேசிய போலீசாரிடம்

சிக்கிய உண்மையான படம் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து நயன்தாரா தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions