படங்கள் குவிவதால் நயன்தாரா சம்பளம் கிடுகிடு உயர்வு

Bookmark and Share

படங்கள் குவிவதால் நயன்தாரா சம்பளம் கிடுகிடு உயர்வு

நயன்தாரா சம்பளம் ரூ.2 கோடியை தாண்டியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா 2004–ல் ‘ஐயா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ரஜினி, சரத்குமார், விஜய், அஜீத், சூர்யா, விஷால், ஆர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள படஉலகில் முன்னணி நடிகையாக தொடர்ந்து வலம் வருகிறார்.

காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது அவரது மார்க்கெட் சரிந்து விடும் என பேச்சு கிளம்பியது. ஆனால் இரண்டாவது ரவுண்ட் துவங்கியபோதும் கலக்கினார். தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு ஒப்பந்தம் செய்தனர். படங்கள் குவிந்தது. தமிழ் படஉலகில் தொடர்ந்து நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார்.

தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ‘மாஸ்’, சிம்புவுக்கு ஜோடியாக ‘இது நம்ம ஆளு’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரவுடிதான்’ படங்களில் நடிக்கிறார். ‘மாயா’ என்ற பேய் படத்திலும் நடிக்கிறார்.

மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த ‘நண்பேன்டா’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

படங்கள் குவிவதால் நயன்தாராவின் சம்பளம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. நயன்தாரா தற்போது ரூ.2 கோடியே 30 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions