
தற்போது அதிக படங்களில் நடித்துவரும் முதல் நடிகை நயன்தாரா மட்டுமே. தமிழில் அரை டஜன் படங்களுக்கு மேல் அவர் கைவசம் இருக்கிறது. இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஓராண்டு ரெட் கார்டு தற்போது விலகியிருப்பதால் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படங்களில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார்.
இதன்காரணமாக, தமிழ் படங்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ள நாட்களை அவர் தெலுங்கு படங்களுக்கு கொடுத்திருக்கிறாராம். ஆனால், இந்த நேரத்தில் சில தமிழ்ப்படங்களின் படப்பிடிப்புகள் இவர் கால்சீட் கொடுத்த தேதியில் நடத்தாமல், வேறு தேதியில் வந்து நயன்தாராவிடம் கால்சீட் கேட்கிறார்களாம்.
ஆனால் அவர்கள் கேட்கிற தேதியை நயன்தாரா வேறு படங்களுக்கு கொடுத்திருப்பதால் இவர்கள் கேட்கிற மறுதேதியை கொடுக்க முடியாமல் இருக்கிறாராம் நயன்தாரா. அதன்காரணமாக தற்போது ஜீவாவின் திருநாள், விஜயசேதுபதியின் நானும் ரெளடிதான் படங்கள்கூட நயன்தாராவின் வரவுக்காகத்தான் வெயிட்டிங்கில் உள்ளன.
இதில் நானும் ரெளடிதான் படத்திற்கு நயன்தாரா கேட்ட தேதியில் கால்சீட் கொடுத்தபோதிலும், விஜயசேதுபதி வேறு சில படங்களில் சிக்கிக்கொண்டதால், இந்த படத்திற்கு குறித்த நாளில் அவரால் வர முடியவில்லையாம்.
அதனால் நயன்தாராவின் கால்சீட் வீணாகி விட்டதாம். ஆக, நயன்தாரா கொடுத்த கால்சீட்டை வேஸ்ட் பண்ணி விட்டு அவர் மீண்டும் எப்போது கால்சீட் தருவார் என்று காத்திருக்கிறார்கள்.
Post your comment