சற்குணம் தயாரிப்பில் நடிக்கும் நயன்தாரா

Bookmark and Share

சற்குணம் தயாரிப்பில் நடிக்கும் நயன்தாரா

நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி, மீகாமன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை அளித்த தயாாிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக ஹித்தேஷ் ஜபக் தயாாிக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளாா்.

இப்படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இயக்குனர் சற்குணம் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான சற்குணம் சினிமாஸ் தயாரிக்கிறது.

இப்படத்தை இயக்குனர் சற்குணமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை நயன்தாரா முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

இப்படத்தின் கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்

படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் மேற்கொள்கிறார். விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த திகிலூட்டும் கிரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கப்படவுள்ளது.
இம்மாதம் முதல் இப்படத்தின் படபிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions