நயன்தாரா திறமையான நடிகை–ஜெயம் ரவி

Bookmark and Share

நயன்தாரா திறமையான நடிகை–ஜெயம் ரவி

நயன்தாரா திறமையான நடிகை என்று ஜெயம் ரவி கூறினார்.

இருவரும் தனி ஒருவன் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். எம்.ராஜா இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
நயன்தாரா, ஏற்கனவே ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். முதல் தடவையாக தற்போது ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

நயன்தாராவுடன் நடிப்பது குறித்து ஜெயம் ரவி கூறியதாவது:–

நயன்தாரா எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவருக்கு பதில் அசின் தேர்வாகி விட்டார். அப்போது அசின் பிரபலமாக இருந்ததால் அவரை நடிக்க வைத்து விட்டோம். இப்போது தனி ஒருவன் படத்தில் சேர்ந்து நடிக்கிறோம்.

நயன்தாரா திறமையான நடிகை, அழகாகவும் இருக்கிறார். தனி ஒருவன் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வருகிறார்.

எல்லா விதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பமாக உள்ளது. அது மாதிரி கதைகளில் நடித்து வருகிறேன்.
இவ்வாறு ஜெயம் ரவி கூறினார். 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions