நயன்தாராவும் அவரது காதல்களும்

Bookmark and Share

நயன்தாராவும் அவரது காதல்களும்

ஐயா படத்தில் பாவாடை தாவணி அணிந்து சாதாரண கிராமத்து பெண்ணாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டயானா மரியம் குரியன் என்கிற நயன்தாரா. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு மலையாள நடிகையாவது அறிமுகமாவதும், அடுத்த வெள்ளிக்கிழமையே அவர்கள் காணாமல் போவதுமான ஒரு காலச்சூழ்நிலையில் நயன்தாராவும் காணாமல் போய்விடுவார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

காரணம் சீனியர் நடிகர் சரத்குமாரின் ஜோடி. அய்யா படத்துக்கு முன் அவர் மலையாளத்தில் நடித்த இரண்டு மூன்று படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாதவை. அதோடு பார்த்திபனின் குடைக்குள்மழை உள்ளிட்ட பல தமிழ் படங்களின் ஆடிசனுக்கு வந்து தேர்வு பெறாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்.

இத்தனை குறைபாடுகளுடன் அறிமுகமானவர் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுவார் என்ற அப்போது யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.  திடீர் அதிர்ஷ்டம்இத்தனை அபாரமான அவரது வளர்ச்சிக்கு காரணம் அழகும், நடிப்பும் மட்டுமல்ல சினிமா இண்டஸ்ட்ரி, மற்றும் ரசிகர்களின் பல்சை மிகச் சரியாக அவர் கணித்து வைத்திருந்ததுதான்.

அவரது கேரியரை சற்று உற்றுப் பார்த்தால் இது மிக தெளிவாகத் தெரியும். நயன்தாராவின் இரண்டாவது படமே ரஜினியுடன் (சந்திரமுகி) அமைந்தது, அவரது திடீர் அதிர்ஷ்டம். அதில் ஜோதிகாவின் கேரக்டர்தான் பவர்புல் என்று அறிந்து அன்றைக்கு இருந்த சில முன்னணி நடிகைகள் தயங்க ரஜினிக்கு ஜோடி என்கிற ஒரு அடையாளம் போதும் என்று அதில் நடித்தார்.

கஜினி படத்தில் அசின்தான் ஹீரோயின் என்று தெரிந்தும் சூர்யா படத்தில் நடித்தவர் என்கிற அடையாளம் போதும் என்பதற்காக அதில் நடித்தார். சிவகாசி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். விஜய் படத்தில் இருக்கிறோம் என்கிற ஒரு அடையாளத்துக்காக. அடுத்து அவர் தனக்கிருந்த பேமிலி இமேஜை தகர்க்க நினைத்தார்.

எஸ்.ஜே.சூர்யாவின் கள்வனின் காதலி படத்தில் ஒரே பேண்டுக்குள் எஸ்.ஜே.சூர்யாவும் அவரும் கால்விட்டு நின்று கொண்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பு கிளப்பி, தன் கிளாமர் இமேஜை அறிவித்தார். சிம்புஅடுத்து வல்லவன் படத்தில் சிம்பு உதட்டை கடித்து இழுக்கும் போஸ்டரில் பரபரப்பு கிளப்பினார். அடுத்த சில படங்களில் மார்க்கெட் டல்லடித்துக் கொண்டிருந்தபோது பில்லா ரீமேக்கில் பிகினி டிரஸ்சில் நடித்து அந்த பரபரப்பில் தன்னை தக்க வைத்துக் கொண்டார்.

அதன் பிறகு தென்னிந்திய சினிமாவின் முதல் இடத்தை பிடித்த அவர் தன்னை எப்போதும் லைம் லைட்டிலும், முதல் இடத்திலும் வைத்துக் கொள்ள தன் காதல்களை பயன்படுத்திக் கொண்டார். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நயன்தாரா வரும்போது அங்கு மூன்று படத்தில்தான் நடித்திருந்தார். அதில் ஒன்றை இயக்கிய இயக்குனரை அவர் காதலிப்பதான கிசுகிசுவோடுதான் தமிழுக்கு வந்தார்.

அடுத்து கள்வனின் காதலி படத்தில் நடித்தபோது எஸ்.ஜே.சூர்யா அவரை வேளாங்கன்னி மாதா கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் என்பது வரைக்கும் பரபரத்தது சினிமா. அடுத்த சில மாதங்களிலேயே வல்லவன் படத்தில் சிம்புவுடன் படு நெருக்கமாக நடித்து அவருடன் காதல் என்று செய்திகள் கிளம்பியது. இந்த காதலைத்தான் அவர் முறையாக ஒப்புக்கொள்ளவில்லை. சிம்புதான் நயன்தாராவை காதலிப்பதாக சொல்லிக் கொண்டிந்தார்.

ஆனால் இடையில் என்ன பிரச்சினையோ இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணைய தளத்தில் வெளியாக, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட... சிம்பு, நயன்தாரா காதல் உடைந்து சிதறியது. அதன் பிறகு சில தெலுங்கு நடிகர்களுடன் காதல் என்று வந்த செய்திகள் அனைத்தும் கிசுகிசுவாக தோன்றி மறைந்துபோனது. பிரபுதேவா  இயக்கிய வில்லு படத்தில் விஜய்யும், நயன்தாராவும் நடித்தனர்.

அந்த நேரத்தில்தான் பிரபுதேவாவின் மகன் திடீர் மரணமடைய... அந்த சோகத்தை நயன்தாரா பகிர்ந்து கொள்ள... அதுவே காதலானது. பிரபு தேவாவுடனான காதலை நயன்தாரா ரொம்பவே வலுவானதாக காட்டிக் கொண்டார். அவரது பெயரை தன் கையில் பச்சை குத்திக் கொண்டார். கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார். அவருடன் எல்லா இடங்களுக்கும் ஜோடியாகச் சென்றார். பிரபுதேவா மனைவியுடன் நேரடியாக மோதினார்.

இதெல்லாம் சில காலம் நடந்தது. அதன் பிறகு என்ன நடந்ததோ யாருக்கும் தெரியாது இந்தக் காதலும் உடைந்தது. எந்த அறிக்கையோ, பரஸ்பரம் குற்றச்சாட்டோ எதுமே இல்லாமல் பிரபுதேவா, நயன்தாரா காதல் பிரிந்தது. இருவரும் தாங்கள் காதலித்தற்கான எந்த அடையாளமும் இல்லாமல் தனித்தனி பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டனர். ஆர்யாஅடுத்து அவர் ஆர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆர்யாவும் மலையாளி என்பதால் இருவரும் நெருங்கிய நட்பாக இருந்தார்கள்.

எந்த விழாவுக்கும் செல்லாதவர் ஆர்யாவின் தம்பி பட விழாவுக்கு மட்டும் வந்தார். ஆர்யா, நயன்தாரா காதல் என்று சூடுபறந்து கொண்டிருந்த நேரத்தில்தான் ராஜா ராணி படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க ஒரு விழாவில் இருவரும் திருமணம் செய்யப்போகிறார்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதனை நயன்தாரா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். அல்லது நயன்தரா அனுமதியுடன் நடந்திருக்கலாம். அப்போது அவருக்கு ஒரு வெற்றி தேவையாக இருந்தது.

அதனால் தன் காதல் கிசுகிசுவையே விளம்பரமாக்க சம்மதித்தார். ராஜா ராணி இயக்குனர் அட்லியுடன் காதல் என்று வந்த செய்திகளை அவன் என் தம்பி மாதிரி என்று சொல்லி முற்றுபுள்ளி வைத்தார் அக்கா நயன்தாரா. ஏற்கெனவே காதலித்து பிரிந்த சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடிக்க சம்மதித்து அடுத்து அதிர்ச்சி அளித்தார். "அவர் ஒரு நடிகை. ஒரு நடிகையாக அந்தப் படத்தின் கேரக்டர் பிடித்து நடிக்கிறார். நயன்தாரா தைரியமான நடிகை.

நடிப்பு என்று வந்துவிட்டால் மற்ற எதையும் அவர் பார்க்க மாட்டார்" என்று சொல்லப்பட்டாலும். ஒரு முன்னாள் காதல் ஜோடி படத்தில் இணைந்து நடிக்கும்போது அந்த படத்தின் வியாபாரமும், விளம்பரமும் தூள் பறக்கும் என்பது நயன்தாராவுக்குத் தெரியும். அதனால் நடிக்க சம்மதித்தார். வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வாங்கினார். சிம்புவின் பிறந்து நாளுக்கு கேக்ஊட்டி படத்துக்கு பப்ளிசிட்டி செய்தார்.

விக்னேஷ் சிவன்அடுத்து தற்போது நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை மையம் கொண்டிருக்கிறது நயன்தாராவின் காதல். இருவருக்குமான காதல் உண்மையானதா, அல்லது விளம்பரத்துக்காக செய்யப்படும் யுக்தியா என்பது இப்போதைக்கு முடிவு செய்யப்படாதது. காரணம் ஏற்கெனவே ராஜா ராணி படத்தின் போதே இதுபோன்ற நாடக காதல் விளையாட்டை அறிமுகப்படுத்தியவர்தானே. காதலும், பிரிவும் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து காதல் ஏற்படுவதற்கான காரணங்களை மிகச் சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அவரது காதல்கள் பிரிந்ததற்கான காரணம் யாருக்கும் தெரியாது. நயன்தாராவின் காதல்களும், பிரிவும் உண்மையானதா, இல்லையா என்பதை விட தன்னை சுற்றி நடக்கும் விஷங்களைக் கொண்டு அவர் தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொள்வதையும். தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வதையும் பார்க்கு-ம்போது அதீத புத்திசாலிப் பெண் நயன்தாராதான் என்பது புரியும்.

இதுவரை தன் காதலையோ, பிரிவையோ அவர் எங்கும், யாரிடமும் பேசியது கிடையாது. அவ்வளவு ஏன் அவர் மீடியாக்களை தவிர்ப்பதற்கு காரணமே காதல் கேள்விகளிலிருந்து தப்பிப்பதற்குத்தான். மொத்தத்தில் நயன்தாரா ரசிகனுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட்டர் சினிமாவிலும், நிஜத்திலும்.

 


Post your comment

Related News
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions