நயன்தாரா காதலுக்கு தனுஷ் வைத்த செக்…

Bookmark and Share

நயன்தாரா காதலுக்கு தனுஷ் வைத்த செக்…

நயன்தாராவின் புதிய காதலர் இயக்குனர் விக்னேஷ்சிவன் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களுக்குள் காதல் மலர்ந்ததே ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் தானாம். அதற்குள் ஷுட்டிங் முடிந்துவிட்டால் எங்கே சந்திப்பது? என்பதால் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பை இயக்குனர் ஜவ்வாக இழுத்து வருகிறாராம்.

படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், தெரியாம கோர்த்துவிட்டுடமே என்று கடுப்பில் உள்ளாராம். இவரை மேலும் கடுப்படிக்கும் விதமாக போன வாரம் இன்னொரு நிகழ்வும் நடந்துள்ளதாம்.

தனுஷிடம் விக்னேஷ் சிவன், ஷுட்டிங் இன்னும் முடியல. ஐந்து நாள் இருக்கு என்றாராம். “யோவ்… நீ லவ் பண்ணுறதுக்கு நானா கிடைச்சேன்? முதல்ல ஐம்பது நாள்ல இந்த படத்தை முடிச்சுர்றதா நீதானே சொன்னே? அப்புறம் 78 நாள் படம் பிடிச்சுருக்கே. அதுவும் போதாம இப்ப வந்து இன்னும் ஐந்து நாள் கொடுன்னு கேட்கிற…

நான் இனிமேல் பத்து பைசா கூட செலவு பண்ண மாட்டேன். படத்தை முடிச்சு கொடுக்கறது உன் பொறுப்பு” என்று எரிந்து விழ, விஷயத்தை நயன்தாரா காதுக்கு கொண்டு சென்றுவிட்டாராம் விக்னேஷ் சிவன்.

“அவர்கள் அப்படிதான். நீ கவலைப்படாதே…” என்று ஆறுதலளித்த நயன்தாரா, ‘கடைசி ஐந்து நாட்கள் ஷுட்டிங் முடிக்க ஆகும் செலவை நானே தர்றேன்’ என்றாராம். சொன்னபடியே அவர் பணத்தில் தான் ஷுட்டிங்கும் முடிந்திருப்பதாக கூறுகின்றனர்.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions