கையெடுத்து கும்பிடும் ஜூனியர் நயன்தாரா!

Bookmark and Share

கையெடுத்து கும்பிடும் ஜூனியர் நயன்தாரா!

வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த பிரமிளாவின் மகள்தான் நடிகை மேக்னாராஜ். அவரது தந்தை சுந்தர்ராஜனும் பல படங்களில் நடித்தவர்தான்.

அதனால் பிரபலங்களின் கலைவாரிசு என்று ஏகோபித்த வரவேற்புடன் சினிமா களத்தில் இறங்கியவர் மேக்னாராஜ். குறிப்பாக, தமிழில் இவர் காதல் சொல்ல வந்தேன் படத்தில் அறிமுகமானபோது ஜூனியர் நயன்தாரா என்று பெரிய பில்டப் கொடுத்து விளம்பரங்களை முடுக்கி விட்டனர்.

ஆனால், அந்த படம் தோல்வியடைந்ததோடு, அதன்பிறகு அவர் நடித்த உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்களும் தோல்வியடைந்தன. அதோடு கிருஷ்ணலீலை என்ற படம் கிடப்பில் கிடக்கிறது.

ஆனால் மலையாளம், கன்னட சினிமாக்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றன. அந்த வகையில், அங்கு சிறந்த கமர்சியல் நடிகையாகவும் ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட மேக்னாராஜை தமிழில் நடிக்க யாராவது இயக்குனர்கள் அழைப்பு விடுத்தால், தமிழே வேண்டாம் ஆளை விடுங்க சாமி என்று கையெடுத்து கும்பிடுகிறாராம்.


Post your comment





Related News
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions