சித்திக்கிடம் நயன்தாரா போட்ட ஒப்பந்தம்!

Bookmark and Share

சித்திக்கிடம் நயன்தாரா போட்ட ஒப்பந்தம்!

31 வயதாகி விட்ட நயன்தாரா இப்போதுதான் சினிமாவில் அதிக அளவு பிசியாக இருக்கிறார். அதோடு இரண்டு நடிகர்களை காதலிப்பதாக செய்திகள் வெளியான பிறகும் அவரது மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது. அந்த அளவுக்கு ஹீரோக்களும் சாதாரண ரசிகர்கள் மாதிரி அவரது ரசிகர்களாக இருந்து வருவதுதான்.

அதனால்தான் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 10 படங்கள் அவர் கைவசம் உள்ளன. அனாமிகாவுக்கு பிறகு ஓராண்டு ரெட் கார்டு போடப்பட்ட நிலையில், இப்போது அந்த தடை நீங்கி விட்டதால் ஒரு தெலுங்கு படத்திலும் கமிட்டாகி விட்ட நயன்தாரா, தனது தாய்மொழியான மலையாளத்திலும் சித்திக் இயக்கும் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் மம்மூட்டியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் இதற்கு முன்பு மலையாளத்தில் அவ்வப்போது ஒரு படத்தில் நடித்து வந்த நயன்தாரா, சமீபகாலமாக மலையாளத்தில் நடிக்கவே தயங்கினார். காரணம், இங்கு படத்துக்குப்படம் அவர் சம்பளம் 10 லட்சம் ஏறிக்கொண்டே சென்று இப்போது 2 கோடியை எட்டி விட்டது.

ஆனால், மலையாளத்திலோ இங்கு வாங்குவதில் 25 சதவிகிதம்தான் கொடுக்கிறார்களாம். இப்போதுகூட பாஸ்கர் த ராஸ்கல் படத்தில் அவருக்கு 40 லட்சம்தான் சம்பளம் பேசியுள்ளார்களாம்.

சித்திக் படம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அந்த படத்துக்கு கால்சீட் கொடுத்தாராம் நயன்தாரா. அதுமட்டுமின்றி, பாடிகார்டு படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என ரீமேக் செய்த சித்திக், பாஸ்கர் த ராஸ்கல் படத்தையும் பல மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதால், மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும்போது அந்த படங்களிலும் கதாநாயகி வாய்ப்பை எனக்கே தர வேண்டும் என்றும் சித்திக்கிடம் ஒப்பந்தம் போட்டுள்ளாராம் நயன்தாரா.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions