நயன்தாராவை டென்சனாக்கிய மலையாள புரொடியூசர்!

Bookmark and Share

நயன்தாராவை டென்சனாக்கிய மலையாள புரொடியூசர்!

பத்து ஆண்டுகளுக்கு மேலாக கொடி நாட்டிய நடிகைகளில் நயன்தாராவுக்கு முக்கிய இடம் உண்டு. காரணம், இப்போதும் அவர் மார்க்கெட்டில் கெட்டியாக நிற்பதுதான். அதுமட்டுமின்றி, முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடிப்பவர், இரண்டரை கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கிறார்.

இந்த தொகையை தர எங்களிடம் பட்ஜெட் இல்லை என்று யாராவது சொன்னால், அப்படியென்றால் என்னிடம் கால்சீட் இல்லை என்று தயவு தாட்சண்யம் இன்றி சொல்லி விடுகிறார் நயன்தாரா.

அதனால் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க வேண்டுமென்றால் கேட்ட தொகையை ஒரே செக்காக போட்டுக்கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் இப்படி தமிழில் இரண்டரை கோடி கேட்டு சொல்லியடித்து வரும் நயன்தாரா, தனது தாய்மொழியாள மலையாள படங்களில் நடிக்க வெறும் 50 லட்சம் மட்டுமே வாங்குகிறார்.

தற்போது மம்முட்டியுடன் நடித்த பாஸ்கர் த ராஸ்கல் படத்தில் நடிக்க இந்த தொகையைதான் வாங்கியிருந்தார். அதேசமயம், இந்த சேதி வெளியில் கசிந்தால் கோலிவுட் புரொடியூசர்கள் கொந்தளித்து விடுவார்கள் என்பதால், இதை வெளியில் லீக்அவுட் செய்து விட வேண்டாம் என்று அப்பட தயாரிப்பாளரிடம் நயன்தாரா கேட்டுக்கொண்டாராம்.

ஆனால், தற்போது அந்த சேதி வெளியாகி விட்டது. இதனால் செம டென்சனில் இருக்கும் நயன்தாரா, உடனடியாக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு தனது கோபத்தை வார்த்தைகளால் செம காட்டு காட்டி விட்டாராம்.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions