இளம் இயக்குநர் உடன் நயன்தாரா காதல்...?!

Bookmark and Share

இளம் இயக்குநர் உடன் நயன்தாரா காதல்...?!

நயன்தாராவின் புதிய காதல் பற்றியும்.... புதிய காதலர் பற்றியும் படத்துறையில் பரபரப்பான தகவல் உலவுகிறது. சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். போடா போடி தோல்வியடைந்த காரணத்தினால் அவருக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடும்போராட்டத்துக்குப் பிறகு தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கி வருகிறார் இவர்.  இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார்.

என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற "அதாரு.. அதாரு" உட்பட சில பாடல்களையும் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தில்  சிறு வேடத்திலும் திரையில் தோன்றினார். இவர்தான் நயன்தாராவின் புதிய காதலர்.

நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவை இயக்கி வரும் விக்னேஷ் சிவன் நாளடைவில் அவருக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். தன் புதிய காதலருக்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை  நயன்தாரா வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் ரசியமாக விக்னேஷ் சிவன் உடன் மாலத்தீவுக்கு ஜாலிட்ரிப் சென்று வந்திருக்கிறார் நயன்தாரா. 

நயன்தாராவுக்கு இந்தக்காதலாவது கல்யாணத்தில் முடியுமா? அதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம்... நயன்தாராவைப் போலவே விக்னேஷ் சிவனும் கேரளாவைச் சேர்ந்தவர்.

மலையாளி. அந்த நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ  தன்னுடைய பூர்விக கிராமத்துக்கு விக்னேஷ் சிவனை அழைத்துச் சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு தன் குடும்பத்தினருக்கு அவரை அறிமுகம் செய்து வைத்ததோடு,

அங்குள்ள சர்ச்சில் சிறப்பு பூஜையும் செய்து வந்திருக்கிறார். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது விக்னேஷ் சிவனை, நயன்தாரா நிச்சயம் திருமணம் செய்து கொள்வார் என்று கூறுகிறார்கள் அவருக்கு  நெருக்கமானவர்கள்.

 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions