நெருக்கமாகிறதா நயன்தாராவின் காதல் ?

Bookmark and Share

நெருக்கமாகிறதா நயன்தாராவின் காதல் ?

நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்குமான காதல் நாளுக்கு நாள் நெருக்கமாகி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தனை நாட்களாக சென்னையில் சொந்தமாக வீடு எதையும் வாங்காத நயன்தாரா தற்போது சென்னை, கோயம்பேட்டில் ஒரு மிகவும் நவீனமான வசதியான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியிருக்கிறார் என்கிறார்கள். 

அவருடைய சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருவல்லாவிலும், கொச்சியிலும் வீடுகளை வைத்துள்ள நயன்தாரா திடீரென சென்னையில் வீடு வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். பொதுவாக நடிகைகள் இயக்குனர்களுடன் ஓரளவிற்கு நட்பாக மட்டுமே பழகுவார்கள். நடிகைகள் இயக்குனர்களைக் காதலிப்பது நடந்து நீண்ட நாட்களாகி விட்டது. 

அப்படி ஒரு பரபரப்பை இயக்குனர் ராஜகுமாரன் - நடிகை தேவயானி காதல் திருமணம்தான் ஒரு காலத்தில் ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு அப்படி ஒரு பரபரப்பை தற்போது நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் நெருக்கம் ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார்கள்.

இத்தனைக்கும் விக்னேஷ் சிவன் இதுவரை ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருக்கிறார். இரண்டாவது படமாக அவர் இயக்கி வரும்  நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க வந்த பிறகுதான் அவர்களிருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது என்கிறார்கள். 

சில நாட்களுக்கு முன் 'நானும் ரௌடிதான் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து  சில புகைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நெருக்கமாக அருகருகே இருந்தது தெரியவந்தது. இப்போது புதிதாக வேறு ஒரு புதிய செல்ஃபி புகைப்படமும் வெளியாகியுள்ளது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions