இருமுகன் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய பிருந்தா மாஸ்டர்!

Bookmark and Share

இருமுகன் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய பிருந்தா மாஸ்டர்!

பிரபல நடன இயக்குனர் பிருந்தா. இவர் தற்போது பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை அனைவருக்கும் ஏற்றாற்போல் நடனம் அமைப்பது இவரின் சிறப்பு. பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இவர் நடனம் அமைத்திருக்கிறார். சிறந்த நடனத்திற்காக பல விருதுகளும் பெற்றிருக்கிறார்.

இவர் தற்போது விக்ரம்-நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘இருமுகன்’ படத்திற்கு நடனம் அமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வருகிறது. அங்கு விக்ரம்-நயன்தாரா பங்கு பெறும் டூயட் பாடலை படமாக்கி வருகிறார்கள்.

பிருந்தா மாஸ்டர் தன்னுடைய பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். ‘இருமுகன்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் பிருந்தா மாஸ்டருக்கு வாழ்த்துக்களை கூறினார்கள். ‘இந்த பிறந்த நாளை சிறப்பாக்கிய நயன்தாராவுக்கு எனது நன்றிகள்’ என்று பிருந்தா மாஸ்டர் கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions