நயன்தாராவின் தற்போது நடிக்கும் 'டோரா' படத்தின் கதை இதுதான்!

Bookmark and Share

நயன்தாராவின் தற்போது நடிக்கும் 'டோரா' படத்தின் கதை இதுதான்!

'களவாணி' இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு “டோரா” என்று பெயரிட்டுள்ளனர்.  

இப்படத்தை தாஸ் ராமசாமி என்பவர் எழுதி இயக்குகிறார். இதில்  நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகர் யார் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

தனக்கென தனித்துவமிக்க கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடித்த அனாமிக்கா, மாயா போன்ற படங்களில் படத்தின் ஒரு சில சீன்களில் மட்டுமே ஹீரோக்கள் வந்து போனார்கள்.

ஆனால் டோரா படத்தைப் பொருத்தவரை நயன்தாராவிற்கு ஜோடியாக காதலர் அல்லது கணவர் கதாப்பாத்திரங்கள் இல்லை.  டோரா படம் கொலை சம்பந்தமான கதைக் களத்தைக் கொண்டிருக்கும். இதில் அந்த கொலையாளி யார் என்பதைக்  கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். 

 த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன் போன்றோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions