விநாயகர்சதுர்த்திக்கு வரும் விக்ரம்!

Bookmark and Share

விநாயகர்சதுர்த்திக்கு வரும் விக்ரம்!

வருகிற செப்டம்பர் 17-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள புதிய ‘மாயா’ படம் வெளியாகவிருக்கிறது. திகில் நிறைந்த பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு போட்டியாக, கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘49 ஓ’ என்கிற படமும் அன்றைய தேதியிலேயே வெளிவரவிருக்கிறது.

இவ்விரண்டு படங்களும் செப் 17-ந் தேதி வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினி முருகன்’ படமும், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படமும் அன்றைய தேதியில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 

தற்போது, இவர்களை முந்திக் கொண்டு விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தை செப்டம்பர் 17-ந் தேதி வெளியாகவுள்ளது. இந்த செய்தியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

விக்ரம் - சமந்தா நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். ‘கோலி சோடா’ படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கியுள்ள படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions