தியேட்டர் ரெஸ்பான்சை பார்க்கும் நயன்தாரா!

Bookmark and Share

தியேட்டர் ரெஸ்பான்சை பார்க்கும் நயன்தாரா!

தற்போது அதிக படங்களில் நடித்து வருபவர் நயன்தாரா. குறிப்பாக முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்து வரும் அவர், தான் நடிக்கும் எல்லா படங்களிலுமே முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினாகத்தான் நடிக்கிறார்.

அந்த வகையில் தற்போது அவருக்கு ஒருநாள்கூட ஓய்வு என்பதே இல்லையாம். ஆனால், இந்த நிலையிலும், தான் நடித்த படங்களை பெரும்பாலும் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

அதற்கு காரணம், ரசிகர்கள் தனது நடிப்புக்கு எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கிறார்கள் என்பதோடு, ரசிகர்களின் ரசனை குறித்து அறிந்து கொள்ளவே இப்படி தியேட்டர் விசிட் அடிக்கிறாராம் நயன்தாரா.

மேலும், அப்படி தான் தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்வதை சீக்ரெட்டாக வைத்திருக்கும் அவர், சென்னையிலுள்ள ஒரு பிரபல தியேட்டருக்கு நள்ளிரவு காட்சிக்கு வருபவர், படம் தொடங்கி 10 நிமிடங்களுக்கு பிறகுதான் பர்தா அணிந்து கொண்டு தனது சகாக்களுடன் படைசூழ வந்து செல்கிறாராம்.

அதோடு, படம் முடியப்போகிறது என்பது தெரிந்ததும் ரசிகர்களுக்கு முன்பாக தான் வெளியேறி பறந்து விடுகிறாராம் நயன்.

 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions