மீண்டும் விளம்பர படங்களுக்கு திரும்புகிறார் நயன்தாரா

Bookmark and Share

மீண்டும் விளம்பர படங்களுக்கு திரும்புகிறார் நயன்தாரா

நடிகை நயன்தாரா விளம்பர படங்களில் நடிக்க எப்போதுமே ஆர்வம் காட்டுவதில்லை. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வளர்ந்து வரும் நேரத்தில் சில புடவை விளம்பரங்களிலும், ஜவுளிக்கடை விளம்பரங்களிலும் நடித்தார்.

அதன் பிறகு அவரது சினிமா கேரியர் உயர்ந்து, சம்பளம் கோடிக் கணக்கில் உயர்ந்ததும், விளம்பர படங்களை தவிர்த்தார். தற்போது நயன்தாராவின் எல்லா நிலைகளிலும் மாற்றம் வந்திருக்கிறது.

டாப் ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்ற நிலைப்பாட்டை மாற்றி விஜய்சேதுபதி, ஆரி ஆகியோருடன்கூட நடிக்கத் தொடங்கிவிட்டார், குறைந்த சம்பளம் என்பதால் மலையாளப்படத்தில் நடிப்பதை தவிர்த்த நயன்தாரா, இப்போது குறைந்த சம்பளத்தில் மலையாளப்படத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சில காரணங்களால் இந்திப் படங்ளை தவிர்த்தவர் இப்போது இந்திப் படத்திற்கும் ஓகே சொல்ல தொடங்கிவிட்டார். சமீபத்தில் ஒரு நகை கடையின் விளம்பரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரு வருடத்திற்கு தேவையான விளம்பரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அதனை மூன்று வருடங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் 5 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். 3 படத்தில் நடித்தால் கிடைக்கும் சம்பளம் ஒரே விளம்பரபடத்தில் கிடைக்கிறது.

இதற்காக 15 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். விரைவில் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட நயன்தாரா முடிவு செய்திருப்பதாகவும். அதற்குள் தேவையான பணத்தை சேர்த்துக் கொள்ள தீவிரமாக நடிப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions