முதன்முதலாக மலையாளத்தில் டப்பிங் பேசும் நயன்!

Bookmark and Share

முதன்முதலாக மலையாளத்தில் டப்பிங் பேசும் நயன்!

இத்தனை வருட காலமாக ஷூட்டிங் ஸ்பாட்டோடு தனது வேலையை முடித்துக்கொண்டு குட்பை சொல்லிவிடும் நயன்தாரா கடந்த வருடம் தமிழில் வெளியான நானும் ரௌடி தான் படத்தில் முதன்முதலாக தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசி அப்ளாஸ்களை அள்ளினார்.

அவருக்கு இந்த அளவுக்கு பாராட்டு கிடைக்க அவரது மனம் கவர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்த ஊக்கமும் ஒரு காரணம். இந்தப்படத்தை முடித்தபின்பு தான் மலையாளத்தில் மம்முட்டியுடன் புதிய நியமம் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்தப்படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிந்து வரும் ஜன-29ஆம் தேதி ரிலீசாவதற்கு தயாராக இருக்கிறது.. இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் நயன்தாராவுக்கு ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படம் நன்றாக வந்திருப்பதில் சந்தோஷப்பட்ட நயன்தாரா, படத்தில் தனக்காக பேசப்பட்ட டப்பிங் குரல் செட்டாகவில்லை என கருதினார்.

உடனே இயக்குனர் ஏ.கே.சாஜனிடம் தானே இந்தப்படத்திற்கு டப்பிங் பேசினால் நன்றாக இருக்கும் என தனது விருப்பத்தை கூறியுள்ளளார்  நயன்தாரா. இயக்குனரும் சந்தோஷமாக டபுள் ஒகே சொல்லிவிட தனது மற்ற பட ஷூட்டிங் நாட்கள் இடைவெளியில் இந்தப்படத்திற்கான டப்பிங்கை பேசிவருகிறாராம் நயன்தாரா.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions