சுந்தர்.சியிடம் மூன்று கோடி கேட்ட நயன்!

Bookmark and Share

சுந்தர்.சியிடம் மூன்று கோடி கேட்ட நயன்!

ஒரு படத்தை இயக்கி முடித்ததும் சில மாத இடைவெளிக்குப் பிறகு அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிடுவது சுந்தர்.சி. ஸ்டைல். தற்போது அரண்மனை - 2 படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் சுந்தர்.சி. அரண்மனை - 2 படம் இம்மாதம் 29 அன்று வெளியாக உள்ளது.

கடந்த மாதமே வெளியாகி இருக்க வேண்டிய அரண்மனை - 2 படம் கிராபிக்ஸ் பணிகள் முடியாமல் இழுத்துக் கொண்டேபோனதால் இம்மாதம் வெளியாகிறது. அரண்மனை -2 வெளியான சில மாதங்களில் தன் அடுத்தப் படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. தொடர்ந்து இரண்டு படங்களில் ஹன்சிகாவை கதாநாயகியாக்கிய சுந்தர்.சி, தன்னுடைய அடுத்தப்படத்துக்கு நயன்தாராவை கதாநாயகியாக்க முடிவு செய்துள்ளார்.

நயன்தாராவிடம் கதை சொன்ன சுந்தர்.சியிடம் கதை தனக்குப் பிடித்திருப்பதாக சொல்லி இருக்கிறார் அவர். அவர் சொன்னதை வைத்து தன் படத்தில் நயன்தாரா நிச்சயம் நடிப்பார் என்று நம்பினாராம் சுந்தர்.சி. நயன்தாராவோ மூன்று கோடி சம்பளம் கேட்டு தகவல் அனுப்பியுள்ளார்.

அதனால் நயன்தாராவை கமிட் பண்ணுவது பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம் சுந்தர்.சி.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions