விக்ரமுடன் ரொமான்ஸ் செய்ய தயாராகும் நயன்தாரா?

Bookmark and Share

விக்ரமுடன் ரொமான்ஸ் செய்ய தயாராகும் நயன்தாரா?

‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கி வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விக்ரம் அடுத்ததாக ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரை அணுகியதாகவும், நயன்தாரா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

விக்ரம் நடிப்பில் உருவாகி வருகிற ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை சிக்கிம் மாநிலத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions