2015ன் 'டாப் ஹீரோயின்' நயன்தாரா தான்...!

Bookmark and Share

2015ன் 'டாப் ஹீரோயின்' நயன்தாரா தான்...!

2014ம் ஆண்டு முடிவில் அனைவரும் வழக்கம் போல அடுத்த ஆண்டின் அதாவது 2015ம் ஆண்டின் டாப் ஹீரோயின் யார் என ஒரு பெரிய சர்வே நடத்தியிருப்பார்கள்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட ஆண்டில் யார் நடித்து அதிகப் படங்கள் வெளிவருகிறதோ, அல்லது யார் நடித்த படங்கள் வெற்றி பெறுகிறதோ, அல்லது யார் அதிகமாகப் பேசப்படுகிறார்களோ அவர்களைத்தான் அந்த ஆண்டின் ’டாப் ஹீரோயின்’ எனக் குறிப்பிடுவார்கள்.

அந்த விதத்தில் மற்ற இளம் நடிகைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி முப்பது வயதைத் தொட்டாலும் முத்திரை பதிக்கத் தயாராக இருக்கிறார் நயன்தாரா. இந்த ஆண்டில் அவர் நடித்து ஒன்றன் பின் ஒன்றாக பல படங்கள் வெளிவர இருக்கின்றன.

முதலில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ’நண்பேன்டா’ ஏப்ரல் 2ம் தேதி வெளிவருகிறது. அடுத்து மே மாதம் சிம்பு ஜோடியாக நடித்துள்ள ’இது நம்ம ஆளு’ வெளிவருகிறது. தொடர்ந்து நயன்தாரா முதன்மைக்  கதாபாத்திரத்தில் நடித்துள்ள ’மாயா’, சூர்யா ஜோடியாக நடிக்கும் ’மாஸ்’, ஜெயம் ரவியுடன் நடிக்கும் ’தனியொருவன்’, விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ’நானும் ரௌடிதான்’ ஆகிய படங்களும் வெளிவர உள்ளன.

தற்போது விக்ரம் ஜோடியாகவும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக, இந்த ஆண்டில் மட்டும் நயன்தாரா நாயகியாக நடிக்கும் 7 படங்கள் வெளி வர வாய்ப்பிருக்கிறது.

அனைத்துமே முன்னணி இயக்குனர்கள், முன்னணி நட்சத்திரங்கள், முதன்மைக் கதாபாத்திரங்கள் தான். இப்போது சொல்லுங்கள் இந்த ஆண்டின் ’டாப் ஹீரோயின்’ நயன்தாரா தானே....!


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions