திடீர் திருமண செய்தி: பட விளம்பரத்துக்காக நயன்தாரா தந்திரம்?

Bookmark and Share

திடீர் திருமண செய்தி: பட விளம்பரத்துக்காக நயன்தாரா தந்திரம்?

சிம்பு, பிரபுதேவா, காதல்கள் முறிந்த பிறகு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. படவிழாக்களுக்கு வருவது இல்லை. பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது இல்லை. அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் ரகசியமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் கொச்சியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நடந்ததாக செய்திகள் பரவின. இதில் இரு வீட்டு பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாகவும் கூறப்பட்டன. இணையதளங்களிலும் இச்செய்தி பரவியது.

விக்னேஷ்சிவன் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் விக்னேஷ் சிவனுக்கு காதல் பரிசாக விலை உயர்ந்த சொகுசு காரை நயன்தாரா பரிசாக கொடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன்தொடர்ச்சியாகவே திருமண செய்தியும் வந்தது.

ஆனால், இதனை நயன்தாரா மறுத்துள்ளார். எனக்கு திருமணம் நடக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு அறவே இல்லை என்று கூறியுள்ளார். அப்படியென்றால் திருமண செய்தியை பரப்பியது யார்? என்று விவாதிக்கப்படுகிறது.

‘நானும் ரவுடிதான்’ படத்தின் விளம்பரத்துக்காக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து இந்த திருமண செய்தியை கிளம்பி விட்டு இருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
ஏற்கனவே சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடித்த ‘வல்லவன்’ படத்துக்காக சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தின. நயன்தாராவின் உதட்டை சிம்பு கடித்து இழுப்பது போல் அந்த போஸ்டர் இருந்தது. அக்காட்சி படத்தில் இடம் பெறவில்லை. படத்தின் விளம்பரத்துக்காக நயன்தாராவின் சம்மதத்தோடு அந்த முத்தகாட்சியை படம் பிடித்து போஸ்ட்டராக ஓட்டி இருந்தனர்.

ஆர்யாவும், நயன்தாராவும் இணைந்து நடித்த ‘ராஜா ராணி’ படத்துக்காகவும் இதுபோன்ற பரபரப்பு போஸ்டர் சென்னையில் ஓட்டப்பட்டது. அந்த போஸ்டரில் ஆர்யாவும், நயன்தாராவும் கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்வது போன்று படங்கள் இருந்தன. பத்திரிகை அலுவலகங்களுக்கும் அவை அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ‘ராஜா ராணி’ படத்தின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு டைரக்டர் அட்லி, ‘ராஜா ராணி’ படத்துக்கான விளம்பரம் என விளக்கம் அளித்தார். நயன்தாராவிடம் ஒப்புதல் பெற்று அவர் சம்மதத்தோடு படத்தின் விளம்பரத்துக்காக இந்த போஸ்டர் தயார் செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அதுபோலவே இந்த திருமண செய்தியும் படத்தின் விளம்பரத்துக்காக நயன்தாராவால் திட்டமிட்டு தந்திரமாக வெளியிடப்பட்டு உள்ளது’ என்கின்றனர். 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions