போப் ஆண்டவரிடம் நேரில் ஆசி பெற்ற நயன்தாரா!

Bookmark and Share

போப் ஆண்டவரிடம் நேரில் ஆசி பெற்ற நயன்தாரா!

நடிகை நயன்தாரா, கேரளாவை சேர்ந்தவர். 1984-ம் ஆண்டில் நவம்பர் மாதம் 18-ந் தேதி பிறந்தார். அவருடைய சொந்த பெயர், டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக, நயன்தாரா என்று பெயரை மாற்றிக் கொண்டார். மலையாள படங்களில் நடித்து வந்த அவர், 2005-ம் வருடம் சரத்குமார் கதாநாயகனாக நடித்து, ஹரி டைரக்டு செய்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களில், அவர் நடித்து வருகிறார். அவரை ரசிகர்கள், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். நயன்தாராவுக்கு 30 வயது நிறைவடைந்து நேற்று 31 வயது பிறந்தது. தனது பிறந்தநாளையொட்டி அவர், போப் ஆண்டவரை சந்தித்து ஆசி பெற விரும்பினார். இதற்காக, கடந்த 13-ந் தேதி அவர் ரோம் நகருக்கு விமானம் மூலம் சென்றார். 

கடந்த 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போப் ஆண்டவர் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில், பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது அவரிடம் நயன்தாராவும் ஆசி பெற்றார். ‘‘போப் ஆண்டவரிடம் ஆசி பெற வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை.

அந்த ஆசை என்னுடைய 31-வது வயதில் நிறைவேறியது’’ என்று நயன்தாரா கூறினார். போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றபின், அவர் வெனீஸ் நகருக்கு சென்றார். வருகிற 26-ந் தேதி அவர் இந்தியா திரும்புகிறார்.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions