கால்சீட் பிரச்சினையில் சிக்கிய நயன்தாரா!

Bookmark and Share

கால்சீட் பிரச்சினையில் சிக்கிய நயன்தாரா!

மாஸ், மாயா படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா, தற்போது இதுநம்ம ஆளு, தனி ஒருவன், நானும் ரவுடிதான், காஷ்மோரா, திருநாள் என பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே டிக்டேடர் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.

இப்படி ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் நிலையில், சில படங்களுக்கு அவர் கொடுத்த கால்சீட்படி படப்பிடிப்பு நடப்பதில்லையாம். அதனால் இவர் கொடுத்த தேதியில் படப்பிடிப்பு நடத்தாமல் வீணடித்து விட்டு, பின்னர் வேறு தேதியில் கால்சீட் கேட்கிறார்களாம்.

ஏற்கனவே கொடுத்த தேதியில் படப்பிடிப்பு நடத்தாமல் மாற்றுதேதி கேட்பவர்களிடம், அந்த தேதியில் வேறு படத்தில் தான் நடிக்கயிருப்பதாக சொல்கிறார் நயன்தாரா. இப்படி பல கம்பெனிகள் பேசியபடி படப்பிடிப்பு நடத்தாததால் ஏகப்பட்ட கால்சீட் பிரச்சினையில் சிக்கியிருக்கிறாராம் நயன்தாரா.

குறிப்பாக, தனுஷ் தயாரிப்பில் விஜயசேதுபதியுடன் அவர் நடித்து வரும் நானும் ரவுடிதான் படத்திற்குகூட முதலில் நயன்தாரா கொடுத்திருந்த தேதியில் படப்பிடிப்பு நடத்தவில்லையாம்.

காரணம், பார்த்திபன் காம்பினேசனில் அவர் நடிக்க வேண்டிய அந்த தேதியில் மாஸ் படப்பிடிப்பில் இருந்தாராம் பார்த்திபன். இதனால் நயன்தாரா கொடுத்திருந்த தேதிகள் முடிவடைந்து விட்டதாம்.

ஆனால், அந்த படவேலைகளை முடித்து விட்டு பார்த்திபன் வந்தபோது, நயன்தாரா வேறு படத்தில் இருந்தாராம். இருப்பினும், தற்போது விஜயசேதுபதி, பார்த்திபன் இருவரது கால்சீட்டும் ஒரே நேரத்தில் கிடைத்திருப்பதால் மீண்டும் நயன்தாராவிடம் கால்சீட் கேட்டு துரத்துகின்றனர்.


Post your comment





Related News
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions