நயன்தாராவின் பர்சனல் வேண்டுகோள்!

Bookmark and Share

நயன்தாராவின் பர்சனல் வேண்டுகோள்!

பிரபுதேவாவை பிரிந்த பிறகு ரொம்ப சீரியசான நடிகையாகி விட்டார் நயன்தாரா. கேமரா முன்பு நடிக்கும் நேரம்போக மற்ற நேரங்களில் சீரியசாகவே அவர் அமர்ந்திருப்பார்.

அவருக்கு முன்னாடி அமர்ந்து அரட்டையரங்கம் நடத்துபவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால்கூட அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் லேசான முன்முறுவலோடு நிறுத்திக்கொள்வார் நயன்தாரா.

விளைவு, அவரது முகபாவனைகளை கவனித்த இயக்குனர்கள் அதன்பிறகு சீரியசான கதைகளுடன் நயன்தாராவை முற்றுகையிட்டனர். அப்போதைக்கு அது அவருக்கு ரொம்ப மேட்சாகவே இருந்தது.

இந்நிலையில், மாஸ், மாயா படங்களை அடுத்து தனி ஒருவன், நானும் ரெளடிதான், காஷ்மோரா, திருநாள் ஆகிய படங்களில் நடித்து வருபவர், அடுத்தபடியாக ஜனரஞ்சகமான கதைகளில் நடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறாராம்.

தற்போது நடித்துவரும் நானும் ரெளடிதான், திருநாள் படங்களில் சீரியசாக கதைகள் என்றாலும், சில காமெடி காட்சிகளிலும் நயன்தாரா நடித்திருக்கிறாராம்.

அதனால் அடுத்தபடியாக இன்னும் காமெடியான கதைகளில் நடிப்பதிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். அதனால் தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம் காமெடியை தூக்கலாக வைக்குமாறு பர்சனலாக கேட்டுக்கொண்டு வருகிறார் நயன்தாரா.


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions