நயன்தாராவின் அம்மா அவதாரம்

Bookmark and Share

நயன்தாராவின் அம்மா அவதாரம்

சூர்யா நடிப்பிலான மாசு படத்திற்கு பிறகு, நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் மாயா.  மாயா படம் சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லராக உருவாகி உள்ளது. மாயா என்ற பெண் கேரக்டரை மட்டும் மையப்படுத்தியதோடில்லாமல், அமானுஷ்ய விஷயங்கள் பலவற்றையும் உள்ளடக்கிய இப்படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது.  

மாயா வேடத்தில் நயன்தாரா நடித்தால், சிறப்பாக இருக்கும் என்றெண்ணிய பட தயாரிப்பு நிறுவனம், நயன்தாராவை சந்தித்து படத்தின் கதையை கூறியது.

கதையை கேட்டபின் நயன்தாரா, 2 நாட்களுக்கு பிறகு தனது முடிவை சொல்வதாக அவகாசம் கேட்டு பின் நடிக்க தனக்கு சம்மதம் என்று தெரிவி்த்திருந்தார். மதுரையை சேர்ந்த புதுமுக இயக்குநர் அஸ்வின் சரவணனின் இயக்கத்தில், மாயா படம் உருவாகி உள்ளது.

விருதுகளை வென்ற குறும்படங்கள் பலவற்றை இயக்கியுள்ள அஸ்வின் சரவணன்,    தொடர்ந்து, மாயா படத்தின் மூலம், கோலிவுட்டில் இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

 பேயை மட்டும் மையப்படுத்தும் ஹாரர் த்ரில்லர் படமாக இல்லாமல் மாயா படம், சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் படமானதால், பேயை மட்டும் மையப்படுத்தாமல், அமானுஷ்ய விஷயங்களால், படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களிடையேயும் பயம் மற்றும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.

ஈரம், யாவரும் நலம்  சாயலில் உருவாகியுள்ள மாயா படத்தில், ஆரி, ரோபோ சங்கர், மைம் கோபி, ரேஷ்மி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தி்ல், நயன்தாரா, ஒரு வயது குழந்தையின் அம்மாவாக நடித்துள்ளார்.  

இந்த கேரக்டரில் நடிக்க நயன்தாரா சம்மதிப்பாரா என்று அஸ்வின் சரவணன் தயக்கத்துடன் நயன்தாராவை அணுக, மறுப்பு எதுவும் கூறாமல்,  உடனடியாக நடிக்க சம்மதித்ததோடு , அபரிமிதமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த கேரக்டரில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  தென்னந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உள்ள நயன், இந்த படத்தில் அம்மா கேரக்டரில் நடித்ததன் மூலம், மிகப்பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார். 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions