நயன்தாராக்கு ராசியான பீர்பாட்டில்!

Bookmark and Share

நயன்தாராக்கு ராசியான பீர்பாட்டில்!

பல நடிகர்,நடிகைகள் மற்றும் இயக்குனர்களும் தங்களின் படங்களுக்கு ஏதாதவது ஒரு ராசி இருக்கும். அந்த வகையில் இப்போது நயன்தாரவுக்கு பீர்பாட்டில் ராசி என்கின்றனர். தனுசுடன் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் மது குடிப்பது போல் நடித்தார். அந்த படம் வெற்றிபெற்றது. 

இதையடுத்து ஆர்யாவுடன் நடித்த ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாரா கையில் பீர்பாட்டில் கொடுத்து காட்சி எடுத்தனர். அந்த படமும் வசூல் அள்ளியது. 

இதனால் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ‘டாஸ்மாக்’ கடைக்கு சென்று நயன்தாரா பீர்பாட்டில் வாங்கி வருவது போன்ற ஒரு காட்சியை வைத்தனர். இந்த காட்சியில் நடித்ததற்காக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. 

பெண்களுக்கு குடிப்பழக்கத்தை அவர் தூண்டுகிறார் என்றும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் எதிர்ப்புகளை மீறி ‘நானும் ரவுடிதான்’ படம் சமீபத்தில் வெளியாகி பெரிய லாபம் பார்த்தது. 

இப்போது ‘திருநாள்’ என்ற படத்தில் ஜீவா ஜோடியாக நயன்தாரா நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்திலும் ராசிக்காக நயன்தாரா கையில் பீர் பாட்டிலுடன் இருப்பது போன்ற காட்சியை படமாக்கி உள்ளனர். இந்த படங்கள் இணையதளங்களில் தற்போது பரவி வருகின்றன.

இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. நயன்தாரா பீர் பாட்டிலுடன் நடிக்கும் காட்சிகளை தவிர்க்கவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.

 


Post your comment





Related News
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions