சிரஞ்சீவியின் 150–வது படத்தில் நடிக்கும் நயன்தாரா!

Bookmark and Share

சிரஞ்சீவியின் 150–வது படத்தில் நடிக்கும் நயன்தாரா!

தெலுங்கு பட உலகின் ‘மெகா ஸ்டார்’ ஆக வலம் வந்தவர் சிரஞ்சீவி. ரசிகர்களிடம் அமோக செல்வாக்கு பெற்றிருந்த இவர், ஒரு கால கட்டத்தில் அரசியல் கட்சியை தொடங்கினார். பின்னர் காங்கிரசில் ஐக்கியமாகி மத்திய மந்தியாகவும் பதவி வகித்தார்.

இப்போது, அரசியலும் இல்லாமல் சினிமாவையும் நினைக்காமல் ஒதுங்கி இருந்த சிரஞ்சீவியை அவரது ரசிகர்கள் மீண்டும் நடிக்கும்படி தொந்தரவு செய்தனர்.

இதுவரை 149 படங்களில் நடித்திருக்கும் சிரஞ்சீவி 150–வது படத்தில் நடித்தே தீர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று புதிய படத்தில் நடிக்கிறார். வி.வி.விநாயக் இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

சிரஞ்சீவி மகன் ராம்சரண் லைகா நிறுவனத்துடன் இணைந்து இதை தயாரிக்கிறார். ‘நயன்தாரா அவர் நடிக்கும் தெலுங்கு படவிழாக்களில் பங்கேற்பது இல்லை’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஒருவருடம் தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இப்போது தடை நீங்கிவிட்டது. என்றாலும், தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் சிரஞ்சீவியின் 150–வது படம் என்பதால் அவருடன் ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.


Post your comment





Related News
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions