விக்ரமுடன் நடிக்க நயன்தாராவை சம்மதிக்க வைத்தது யார் தெரியுமா?

Bookmark and Share

விக்ரமுடன் நடிக்க நயன்தாராவை சம்மதிக்க வைத்தது யார் தெரியுமா?

தமிழ்த் திரையுலகில் பிரிவதும் இணைவதும் வழக்கமா நடக்கும் ஒன்றுதான். நடக்கவே நடக்காத விஷயங்களாக கருதப்பட்ட விஷயங்கள் காலப் போக்கில் நடந்துள்ளன.

அதற்குப் பெரிய உதாரணமாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், அஜித் இருவரையும் சொல்லலாம். ஒரு காலத்தில் அவர் தயாரிப்பில் நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்திருந்த அஜித் தற்போது அவருடைய தயாரிப்பில் மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

'துருவ நட்சத்திரம்' படப்பிரச்சனையில் பிரிந்த கௌதம் மேனன் - சூர்யா கூட சீக்கிரம் இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அப்படி ஒரு வானிலை மாற்றம் தற்போது விக்ரம், நயன்தாரா ஆகியோரிடையே ஏற்பட்டுள்ளது. 'கள்வனின் காதலி' படத்தில் நயன்தாரா நடித்த போது, விக்ரமுடன் நயன்தாராவை ஜோடியாக நடிக்கக் கேட்டதாகவும், ஆனால், 'கள்வனின் காதலி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நயன்தாரா நடிக்கக் கூடாது என விக்ரம் கண்டிஷன் போட்டதாகவும் கோலிவுட்டில் நீண்ட காலமாக செய்தி உலவி வருகிறது. 

நயன்தாரா நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1999ல் வெளிவந்த 'சேது' படத்தின் திருப்பு முனை மூலம் விக்ரமும் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இந்த 10 ஆண்டுகளில் இருவருமே ஜோடி சேர்ந்து நடிக்காமலே இருந்தார்கள்.

விஜய் சேதுபதியுடனும் ஜோடி சேர்ந்த நயன்தாரா விக்ரமுடன் ஜோடி சேரவில்லை என்றால் எப்படி ?.

'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரின் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் அடுத்த படத்திற்கு நயன்தாராவை ஜோடியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். நயன்தாராவின் மனதைக் கனிய வைத்த அந்த புண்ணியவான் யார் என்று கோலிவுட்டில் கடந்த சில நாட்களாகப் பரபரப்பாகப் பேச்சு எழுந்து வருகிறது.

மேலும் அது அந்த 'வி' யாக இருப்பாரோ? என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions