ஜீவா உடன் நடிக்க மறுத்த நயன்தாரா!

Bookmark and Share

ஜீவா உடன் நடிக்க மறுத்த நயன்தாரா!

நீதானே என் பொன் வசந்தம், என்றென்றும் புன்னகை, யான் என ஜீவா நடிப்பில் கடந்த வருடங்களில் வெளியான படங்கள் எதுவுமே ஓடவில்லை. குறிப்பாக, அவரது மார்க்கெட் வேல்யூவுக்கு அதிகமான செலவில் எடுக்கப்பட்ட யான் படத்தின் தோல்வி அப்படத்தின் தயாரிப்பாளரை தலையில் துண்டைப்போட வைத்துவிட்டது.

தொடர்தோல்வி காரணமாக ஜீவாவை வைத்து படம் எடுக்க யாருமே முன்வரவில்லை. எனவே சூப்பர்குட் பிலிம்ஸில் மானேஜராக வேலைபார்க்கும் செந்தில் என்பவரது பெயரில் தானே படத்தைத் தயாரித்து நடிக்கிறார் ஜீவா.

இந்தப் படத்தை ராம்நாத் என்பவர் இயக்குகிறார். இவர் கருணாஸை வைத்து அம்பாசமுத்திரம் அம்பானி என்ற காமெடி படத்தை இயக்கியவர். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியிருக்கிறார்கள்!  மார்க்கெட் இல்லாத ஜீவா உடன் நடித்தால் தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் நடிக்க மறுத்துவிட்டாராம் நயன்தாரா.

ஏற்கனவே ஈ படத்தில் சேர்ந்து நடித்த பழக்கத்தில் ஜீவாவே நேரடியாக நயன்தாராவுக்கு போன் போட்டு பேசினாராம். இப்போது நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறேன். எனவே கால்ஷீட் இல்லை என்று நாசூக்காக மறுத்துவிட்டாராம் நயன்தாரா! அவர் நடிக்க மறுத்ததால் இப்போது ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதிவ்யாவை கமிட் பண்ணி இருக்கிறார்கள்.  

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் 15-ஆம் தேதி துவங்குகிறது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படம் சிட்டி, வில்லேஜ் பின்னணியில் உருவாகிறது!


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions