கிளிசரின் போடாமல் கண்ணீர் விடும் நயன்தாரா!

Bookmark and Share

கிளிசரின் போடாமல் கண்ணீர் விடும் நயன்தாரா!

நயன்தாராவின் நடிப்புக்கு தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் படம் பெரிய சான்றாக அமைந்தது. அப்படத்தில் அவர் நடித்த சீதை வேடத்தில் இதுவரை எந்த நடிகையும் அத்தனை தத்ரூபமாக நடித்ததில்லை என்று ஆந்திர திரையுலகமே அந்த படம் வெளியான நேரத்தில் நயன்தாராவை கொண்டாடியது.

அதேசமயம், அந்த படத்திற்கு பிறகு அவர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு டாட்டா காட்ட இருப்பதாக கூறியதால், ஒரு மிகப்பெரிய நடிகையை இந்த திரையுலகம் இழக்கப்போகிறது என்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பீல் பண்ணினார்கள்.

அந்த அளவுக்கு அந்த சீதை வேடம் மூலம் நடிகர் நடிகைகளையே பாதித்திருந்தார் நயன்தாரா. அப்படிப்பட்ட அவர், மீண்டும் நடிக்க வந்து மறுபடியும் உச்சாணியில் நின்று கொண்டிருக்கிறார்.

நயன்தாராவுக்கான ரசிகர்கள் இன்னும் அதிகரித்துக்கொண்டேயிருப்பதால் அவரிடம் கால்சீட் கேட்டு இயக்குனர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.  ஆனால், இந்த நேரத்தில் வருகிற படங்களையெல்லாம் வாரி சுருட்டிக்கொள்ளும் மனநிலையில் நயன்தாரா இல்லையாம்.

அதாவது, மொத்தக்கதையையும் கேட்பவர், வெறும் கிளுகிளு காட்சிகளில் நடிப்பதை விட படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும்படியான காட்சிகளே இல்லையே என்று சுட்டிக்காட்டுகிறாராம்.

அதனால் அவருக்காக சில செண்டிமென்ட் காட்சிகளையும் இணைக்கிறார்களாம் இயக்குனர்கள். அதோடு, அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கும்போது கிளிசரின் போட்டுக்கொள்ளுங்கள் என்று டைரக்டர்கள் சொன்னால், அதெல்லாம் தேவையில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு கேமரா முன்பு வரும் நயன்தாரா, நடிக்கத் தொடங்கியதும் அவரது கண்களில் மடைதிறந்தார் போல் கண்ணீர் கொட்டுகிறதாம்.

கிளிசரின் போட்டாலே கண்ணீர் வராமல் பல நடிகர் நடிகைகள் அவஸ்தை படும் நிலையில், நயன்தாராவின் கண்களில் எதுவுமே போடாமல் கண்ணீர் கொட்டுவதை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions