வெங்கடேஷுடன் ஜோடி சேரும் நயன்தாரா

Bookmark and Share

வெங்கடேஷுடன் ஜோடி சேரும் நயன்தாரா

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் வெங்கடேஷுடன் மீண்டும் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இயக்குநர் கரந்தி மாதவ் இயக்கும் படத்தில் வெங்கடேஷ் நாயகனாக நடிப்பதாகக் கூறப்பட்டது. தற்போது வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

துளசி, கிருஷ்ணம் வண்டே ஜகத்குரும், லக்ஷ்மி போன்ற படங்களில் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடித்த நயன்தாரா மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் பர்சுரி பிரசாத் இப்படத்தை தயாரிக்கின்றார்.

இப்படத்திற்கான பூஜை ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் நடைபெறும் என தெரிகிறது. தமிழில் மாயா எனும் திகில் படத்தில் நடித்துவரும் நயன்தாரா ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ள தனியொருவன் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 


Post your comment





Related News
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions