மீண்டும் திரில்லர் படத்தில் நயன்தாரா!

Bookmark and Share

மீண்டும் திரில்லர் படத்தில் நயன்தாரா!

த்ரில்லர் கதைகள் மூலமாக வெற்றிகளை தந்த ஒரு இயக்குனர், புகழிலும் ரசிகர்கள் மனதிலும் உச்சியில் இருக்கும் ஒரு பெண் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்தால் அது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.

தனது முதல் படம் முதல் தனது சமீபத்தைய ''குற்றம் 23' படம் வரை பல வெற்றிகளை தந்த இயக்குனர் அறிவழகன் , நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.

இது குறித்து இயக்குனர் அறிவழகன் பேசுகையில், ''ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்போகும் இந்த சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நயன்தாரா போன்ற ஒரு திறமையுள்ள நட்சத்திரம் நடிக்க இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

அவரது நட்சத்திர அந்தஸ்தும் நடிப்பு திறனும் இக்கதையை மேலும் சிறப்பாக்கும். படத்தின் தயார் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் மாதம் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதம் தொடக்கத்திலோ படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் ஒரு பகுதிக்கு நயன்தாராவிற்கு ஜோடியுள்ளது ஆனால் இப்படத்தின் ஹீரோ என்று யாரும் கிடையாது. நயன்தாராவின் கதாபாத்திரம் தான் ஹீரோ.

இது போன்ற ஒரு கதையை இயக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு ரொம்ப காலமாகவே இருந்தது. அது இப்பொழுது நிறைவேற இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. சென்னையில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது . 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுளோம்.''

இப்படத்தை 'S P சினிமாஸ்' திரு. ஷங்கர் தயாரிக்கவுள்ளார். தமனின் இசையில், KM பாஸ்கரனின் ஒளிப்பதிவில் இப்படம் உருவாகவுள்ளது.

 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
தள்ளிப்போனது நயன்தாரா படத்தின் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions