கூட்டத்தை வெளியேற்றும் நயன்தாரா!

Bookmark and Share

கூட்டத்தை வெளியேற்றும் நயன்தாரா!

2003ல் மனசினக்காரே என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்தவர் 2004 இறுதியில் ஹரி இயக்கிய ஐயா என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தபடி தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார்.

முதல்படமே ஹிட்டாக அமைந்ததால் தமிழில் ராசியான ஹீரோயினியாக கருதப்பட்ட நயன்தாரா, அதையடுத்து விஜய், அஜித், ரஜினி என மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடி முன்னணி நாயகியானார்.

அந்த வகையில், கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார் நயன்தாரா. இப்போதும் முன்னணி ஹீரோக்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.

ஆனால், பெரும்பாலும் தான் நடிக்கிற முக்கியத்துவம் வாய்ந்த கிளாமர், ரொமான்ஸ் காட்சிகளின்போது சுற்றியிருக்கிற கூட்டம் தன்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது நயன்தாராவுக்கு எப்போதுமே பிடித்ததில்லையாம்.

அதனால், தன்னை மொத்த கூட்டமும் எந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கும்போது உற்று கவனிக்கிறதோ அப்போது டைரக்டரிடம் சொல்லி, கூட்டத்தை கொஞ்சம் வெளியேற்றுங்கள்.

அத்தனை கண்களும் என்னை மொய்ப்பதால் என்னால் நடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. கவனம் சிதறுகிறது என்கிறாராம் நயன்தாரா. அதனால், நயன் நடிக்கும் பெரும்பாலான கிளுகிளு காட்சிகளெல்லாம் இயக்குனர், கேமராமேன் உள்பட சிலரது முன்னிலையில் மட்டுமே படமாக்கப்பட்டு வருகிறதாம்.


Post your comment





Related News
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions