ராதா வேடத்தில் நயன்!

Bookmark and Share

ராதா வேடத்தில் நயன்!

குடும்ப பெண் நடிகையாக சினிமாவில் நுழைந்த நயன்தாரா, பில்லா படத்தில் பிகினி உடை அணிந்து கவர்ச்சி நாயகியாகி பின் ஏராளமான ரசிகர்கள் பிடித்தார்.

அதோடு, தெலுங்கில் சில படங்களில் கிளாமர் ரோலில் நடித்திருந்தபோதும், பாலகிருஷ்ணா நடித்த ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்தார் நயன்தாரா.  

அந்த படம் நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் நந்தி விருதினை பெற்றுக்கொடுத்தது. ஆனால், பின்னர் காதல், காமெடி, ஆக்சன் என மாறுபட்ட கதைகளில் நடித்தபோதும், பக்தி கதைகளில் நயன்தாரா நடிக்கவில்லை. 

அதோடு முழுநேரத்தையும் தமிழ் மற்றும் மலையாள படங்களுக்காகவே செலவிட்டு வந்தார். இந்த நிலையில், மீண்டும் அவரை தெலுங்கு படங்களில் நடிக்க சில இயக்குனர்கள அழைப்பு விடுத்து வந்த நிலையில், தற்போது வெங்கடேஷ் நடிக்கும் ஒரு பக்தி கதையை ஓகே செய்திருக்கிறார் நயன்தாரா. 

இந்த படத்தில் நயன்தாரா ராதா வேடத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. மேலும் நயன்தாராவின் தமிழ் சினிமா மார்க்கெட் பிரகாசமாக இருப்பதால் அந்த படத்தில் சில தமிழ் நடிகர்களையும் நடிக்க வைத்து இரண்டு மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

 


Post your comment





Related News
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions