நான் பீர்வாங்கும் காட்சியை ஊதி பெரிதாக்குவது சிறுபிள்ளைத்தனமானது: நயன்தாரா கோபம்

Bookmark and Share

நான் பீர்வாங்கும் காட்சியை ஊதி பெரிதாக்குவது சிறுபிள்ளைத்தனமானது: நயன்தாரா கோபம்

நடிகை நயன்தாரா டாஸ்மாக்கில் பீர் வாங்குவது போன்ற வீடியோ காட்சி இணைய தளத்தில் வெளியானது. அது வைரலாக பரவியது. நயன்தாரா மதுக்கடையில் சென்று பீர்வாங்கும் காட்சியை கண்டித்து சில அமைப்புகள் அறிக்கை வெளியிட்டது.

போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தது. இந்த நிலையில் இதுகுறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் மதுக்கடைக்கு சென்று பீர் வாங்குவது போன்ற காட்சி ஒரு சினிமாவுக்காக எடுக்கப்பட்ட காட்சி. பாண்டிச்சேரியில் மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு கடையில் இந்த காட்சி எடுக்கப்பட்டது.

நான் என்னை பற்றி வரும் எந்த கிசுகிசுவிற்கும் விளக்கம் தருவதில்லை. ஆனால் நான் நடித்த ஒரு சினிமா காட்சியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து பிரச்னையை தூண்டிவிடுகிற மாதிரி ஊதி பெரிதாக்குவதை கண்டிக்கிறேன்.

இது சிறுபிள்ளைத்தனமானது.பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு கடையில் நான் போய் மது வாங்க முடியுமா? இதை ஏன் யாரும் யோசிக்க வில்லை. எனவே சினிமாவுக்காக எடுக்கப்பட்ட அந்த காட்சியை யாரும் உண்மை என்று நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நயன்தாரா அறிக்கையில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions